டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கு பின் வெஸ்ட் அணியை எதிர்த்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், 3வது டி20 போட்டியில் இந்திய அணி வென்று பதிலடி கொடுத்துள்ளது. இருப்பினும் டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது.
இந்த சூழலில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி இரு டி20 போட்டிகள் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடக்கவுள்ளது. இதற்காக இரு நாட்டு வீரர்களும் தங்களது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் முகாமிட்டுள்ளனர். ஆகஸ்ட் 12 மற்றும் ஆகஸ்ட் 13 என்று அடுத்தடுத்த நாட்களில் கடைசி இரு போட்டிகள் நடக்கவுள்ளது.
இந்த இரு போட்டிகளுமே இந்திய அணிக்கு வாழ்வா சாவா போட்டிகள் தான். இரண்டிலும் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை கைப்பற்ற முடியும். இரண்டில் ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும், 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தொடரை பறிகொடுக்கும் நிலை உருவாகும்.
இதனால் கடைசி இரு டி20 போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி வீரர்களோ, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்க்க புறப்பட்டுள்ளனர்.
ஒருபக்கம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் தனது மனைவியுடன் அமெரிக்காவின் தெருக்களில் சுற்றி வருகிறார். அதன்பின்னர் பல்வேறு ஹோட்டல்களிலும் உணவை ருசி பார்த்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்தப் புகைப்படங்களை சூர்யகுமார் யாதவின் மனைவி தேவிஷா ஷெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
𝙏𝙤𝙪𝙘𝙝𝙙𝙤𝙬𝙣 Miami ✈️#TeamIndia | #WIvIND pic.twitter.com/SKJTbj0hgS
— BCCI (@BCCI) August 10, 2023
அதேபோல் இன்னொரு பக்கம் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஃபுளோரிடாவின் கடற்கரை பக்கம் ஒதுங்கி காற்று வாங்கிக் கொண்டிருக்கிறார். இது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால், தொடரையே வென்றதாக அர்த்தமில்லை என்று விமர்சித்து வருகின்றனர்.
View this post on Instagram