Homeகிரிக்கெட்இந்திய அணியில முக்கியமான சில பிரச்சனைகள் இருக்கு.. அவங்கள்லாம் தலைவலியா இருந்தாங்க பாத்திங்கல்ல - சயித்...

இந்திய அணியில முக்கியமான சில பிரச்சனைகள் இருக்கு.. அவங்கள்லாம் தலைவலியா இருந்தாங்க பாத்திங்கல்ல – சயித் அன்வர் கருத்து

-Advertisement-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 9 நாட்களே உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே இந்தியாவுக்கு வந்துவிட்டனர். நெதர்லாந்து பெங்களூருவில் உள்ள மைதானத்தில் பயிற்சியை தொடங்கிவிட்டது. ஏற்கனவே கர்நாடகா அணிக்கு எதிராக நெதர்லாந்து அணி விளையாடி பயிற்சி பெற்றது.

அதேபோல் சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பையை வெல்வதற்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அதன் காரணமாகவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு போட்டிகளில் இந்தியா அபாரமாக விளையாடி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

-Advertisement-

இந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியின் அத்தனை வீரர்களும் ஃபார்முக்கு வந்தனர். அதேபோல் பேக் அப் வீரர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 19 மாதங்களுக்கு பின் சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்து அடித்த அரைசதம், ஷமியின் 5 விக்கெட்டுகள், சுப்மன் கில்லின் அசத்தலான சதம், கேஎல் ராகுலின் கேப்டன்சி என்று அனைவரும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதேபோல் மிடில் ஆர்டரில் சொதப்பிய ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோரின் ஆட்டமும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய அணி உலகக்கோப்பைக்கு தயாராகிவிட்டதாக ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த நிலையில் இந்திய அணி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சயித் அன்வர் கருத்து தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சயித் அன்வர் பேசும் போது, உலகக்கோப்பை தொடர் நெருங்கிவிட்ட நிலையில், இந்திய அணி சிறந்த ஃபார்மில் இருக்கிறது. நிச்சயம் உலகக்கோப்பை வெல்ல இந்திய அணிக்கு தான் அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இந்திய அணிக்கு சில சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது போட்டியில் இந்திய அணியின் டெத் பவுலிங் மோசமாக இருந்தது.

சிறிய பவுண்டரிகள் கொண்ட மைதானம் மற்றும் டெத் பவுலிங்கில் இந்திய அணி கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஆஸ்திரேலிய அணியின் பவுலர்களான அப்பாட் மற்றும் ஹேசல்வுட் இருவரும் இந்திய அணிக்கு தலைவலியாக இருந்தார்கள் என்று கூறியுள்ளார்.

அன்றைய ஆட்டத்தில் ஷமி மட்டுமே பிளேயிங் லெவனில் பந்துவீசி வந்தார். பும்ரா மற்றும் சிராஜ் கம்பேக் கொடுக்கும் பட்சத்தில் இந்திய அணியின் பவுலிங் அட்டாக் இன்னும் தீவிரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

-Advertisement-

சற்று முன்