- Advertisement -
Homeவிளையாட்டுஇந்திய அணி ஒன்னும் உன் சொந்த வீடு இல்ல.. சீக்கிரம் உன்ன துரத்த போறாங்க ...

இந்திய அணி ஒன்னும் உன் சொந்த வீடு இல்ல.. சீக்கிரம் உன்ன துரத்த போறாங்க – கில் மீது முன்னாள் இந்திய வீரர் தாக்கு

- Advertisement-

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில். அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் மட்டும் 17 போட்டிகளில் விளையாடி 890 ரன்களை விளாசி தள்ளியவர். இதனால் உலகக்கோப்பை நடக்கப்போகும் சுப்மன் கில் உச்சக்கட்ட பேட்டிங் ஃபார்மில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் ஐபிஎல் தொடரில் இருந்த ஃபார்ம், இந்திய அணிக்கு வந்த பின் காணாமல் போனது.

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என்று எதிலும் சுப்மன் கில் சரியான பேட்டிங் செய்யவில்லை. அதேபோல் 3 ஒருநாள் போட்டிகளில் ஒரேயொரு அரைசதம் மட்டும் அடித்திருந்தார். தற்போது மீண்டும் டி20 தொடரில் தொடர்ந்து 2 போட்டிகளில் சொதப்பி வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் புதியப் பந்தில் தான் வேகமாக ரன்கள் சேர்க்க முடியும் என்ற நிலையில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் – இஷான் கிஷன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் முன்னாள் வீரர் பலரும் சுப்மன் கில்லை காட்டமாக விமர்சித்தனர்.

- Advertisement-

இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் போது, சுப்மன் கில் ரன்கள் சேர்க்க தொடங்க வேண்டும். ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், தற்போது ரன்கள் சேர்க்க முடியாமல் இருக்கிறார். ஒவ்வொரு பந்திலும் பெரிய ஷாட் அடிக்க வேண்டும் என்று முயல்வதே அவரது பிரச்சனையாக உள்ளது. சுப்மன் கில் வழக்கமாக அப்படி ஆடக் கூடியவர் அல்ல.

அதேபோல் சுப்மன் கில்லுக்கு இந்திய அணி என்பது ஒரு வாடகை வீட்டை போல தான். அவர் இன்னும் அந்த வீட்டை வாங்கவில்லை. அணி நிர்வாகத்தில் இருந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இருந்தாலும் அவரது இடம் உறுதியானதல்ல. ஒரு வேலை வாடகை வீட்டுக்கு 4 முதல் 5 போட்டிகளாக பணம் கட்டவில்லை என்றால், மொத்தமாக வீட்டினை காலி செய்ய வேண்டிய சூழல் வரும். ஒவ்வொரு வீரருக்குமே அவ்வளவு வாய்ப்புகள் தான் வழங்கப்படும்.

சிலர் 6 மாதங்களாக ரன்கள் சேர்க்கவில்லை என்றாலும், வாய்ப்பு வழங்கப்படுவதற்கு காரணம் உண்டு. அவர்களுக்கு 6 மாதங்களுக்கான கட்டணத்தை முன்பே கட்டியதை போல் தங்களின் திறமையை நிரூபித்திவிட்டார்கள். ஆனால் சுப்மன் கில் இன்னும் அந்த இடத்திற்கு நகரவில்லை என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

அதேபோல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்க வேண்டும். நிச்சயம் தொடக்க வீரர் இஷான் கிஷனுக்கு நேரடி மாற்று வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருப்பார். கடைசி 10 முதல் 12 போட்டிகளாக இஷான் கிஷன் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்