- Advertisement -
Homeவிளையாட்டுமூளைய யூஸ் பண்ணவே நெனைக்கல... சொல்லவே கேவலமா இருக்கு.. பால்வாடி பசங்க விளையாடுனது போல இருந்தது...

மூளைய யூஸ் பண்ணவே நெனைக்கல… சொல்லவே கேவலமா இருக்கு.. பால்வாடி பசங்க விளையாடுனது போல இருந்தது – ரமீஸ் ராஜா அதிரடி பேச்சு

- Advertisement-

ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வெற்றி குறித்த பேச்சுகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே வைத்து வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா. சிராஜ் வீசிய ஒவ்வொரு பந்தையும் எண்ணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல் இந்திய அணியின் வெற்றி பல்வேறு அணிகளுக்கும் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சூழலில், இவ்வளவு பலம் வாய்ந்த அணியாக இந்தியா உருவெடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சரியான நேரத்தில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் ஃபார்முக்கு வந்திருக்கிறார்கள் என்ற பேச்சுகள் தொடங்கியுள்ளன.

- Advertisement -

குறிப்பாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணி வீரர்களை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். பாகிஸ்தான் அணி வீரர்களை விடவும், இந்திய அணியினரையே அவர்கள் புகழ்கின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா பேசும் போது, கொழும்பு ஆடுகளம் விளையாட முடியாத அளவிற்கு கடினமாக இல்லை. இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். அதேபோல் இலங்கை பேட்ஸ்மேன்கள் மோசமாக ஆடினார்கள்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இதுபோன்ற அபாரமான பந்துவீச்சை நீண்ட நாட்களாக பார்க்கவில்லை. இலங்கை பேட்ஸ்மேன்களும் செய்த தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் மூளையையும் பயன்படுத்தவும் நினைக்கவில்லை. அவர்களின் பேட்டிங்கை பார்க்கும்போது, எப்போது ஓய்வறை திரும்புவோம் என்பதை போலவே இருந்தது. இலங்கை அணிக்கு ஆடுகளமும், எதிரணியும் பரிட்சியமானது.

- Advertisement-

ஆனாலும் இப்படியொரு தோல்வியை சந்தித்திருக்கிறார்கள். சொந்த மண்ணில் ஒரு அணி 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பார்த்ததே இல்லை. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஒரு அணி, 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இதனை இறுதிப்போட்டி என்று சொல்வதற்கே கேவலமாக உள்ளது. ஹார்வெர்ட் பல்கலைக்கழக மாணவர்களுடன் கிண்டர்கார்டன் மோதிய ஆட்டம் போல் உள்ளது.

இந்திய அணி பந்துவீச்சாளர்கள் மற்றவர்களின் வெற்றியையும் கொண்டாடி வருகிறார்கள். அங்கு பொறாமை கிடையாது. ஆசியக் கோப்பை வெற்றி இந்திய அணிக்கு மிகமுக்கியமான ஒன்று. ஏனென்றால் கடைசியாக ஆடிய தொடர்களில் அவர்களால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லை. இந்த வெற்றி நிச்சயம் அவர்களின் நம்பிக்கையை அதிகரித்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

சற்று முன்