- Advertisement -
Homeவிளையாட்டுகோலி, ரோகித் எல்லாம் இல்ல... இந்தியாவுக்கு மேட்ச் வின்னரா இருக்கப்போறது இந்த பவுலர் தான்.. முன்னாள்...

கோலி, ரோகித் எல்லாம் இல்ல… இந்தியாவுக்கு மேட்ச் வின்னரா இருக்கப்போறது இந்த பவுலர் தான்.. முன்னாள் பாக் கேப்டன் – பேச்சு

- Advertisement-

இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ள வேளையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை லீக் போட்டியானது பெருமளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் பொதுவாகவே கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி தொடர்களில் மட்டுமே பாகிஸ்தான் அணியுடன் மோதி வருவதால் இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்த விமர்சனங்களும், விவாதங்களும் பல்வேறு முன்னாள் வீரர்களிடமும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தான அணியின் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் மேனேஜரமான இன்டிகாப் ஆலம் தற்போது இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணியின் சாதக பாதங்களை கூறியுள்ளார்.

இந்திய அணி குறித்து அவர் கூறுகையில், ஆசிய கோப்பையில் இந்திய அணி விளையாடிய விதம் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடிய விதத்தை வைத்து பார்த்தால் அவர்கள் மற்ற அணிகளை தோற்கடிக்க கூடிய வகையில் நல்ல ஒரு நிலையில் இருக்கிறார்கள். அவர்களின் ஸ்பின் அட்டாக் மற்றவர்களை காட்டிலும் மேலோங்கி இருக்கிறது.

குலதீப் யாதவ் இந்த உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறந்த வீரராக இருக்கப் போகிறார். அவர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் சவால்களை கொடுக்க கூடியவராக இருப்பார். ஜடேஜா மற்றும் குலதீப் யாதவ் சிறந்த ஒரு காம்பினேஷனாக இந்திய அணியில் உள்ளனர். இந்த உலகக் கோப்பையை பொறுத்தவரை குலதீப் தான் சிறந்த ஸ்பின்னராக இருப்பார். இவர்களோடு இப்பொழுது அஸ்வினும் இணைந்துள்ளார். இது அந்த அணிக்கு பலம் தான் என்று கூறியுள்ளார்.

- Advertisement-

பாகிஸ்தான் அணி குறித்து கூறுகையில், பாகிஸ்தானின் பவுலிங் துறையை பொருத்தவரை அந்த அணியின் வீக்னஸே மிடில் ஓவரில் பந்து வீசும் ஸ்பின்னர்கள் தான். ஆசிய கோப்பையிலும் பாகிஸ்தான் அணி இதில் தடுமாறியது. வேகப்பந்து வீச்சில் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். இல்லை என்றால் எதிரணி வீரர்கள் 300 ரன்களை எளிதாக அடித்து விடுவார்கள்.

அதே போல் நசீம் ஷா இந்த உலக கோப்பை போட்டியில் இல்லாதது பாகிஸ்தான் அணிக்கு இழப்புதான். புதிய பந்தல் அவர் சிறப்பாக பந்து வீசக்கூடியவர் என்று அவர் கூறியுள்ளார்.

சற்று முன்