- Advertisement 3-
Homeவிளையாட்டுஇப்படி ஏமாத்தி ஜெயிக்கணுமா.. அர்ஷ்தீப்னால எப்படி முடிஞ்சுது.. சர்ச்சையை கிளப்பிய இன்சமாம்..

இப்படி ஏமாத்தி ஜெயிக்கணுமா.. அர்ஷ்தீப்னால எப்படி முடிஞ்சுது.. சர்ச்சையை கிளப்பிய இன்சமாம்..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி இந்த முறை நடைபெற்று வரும் டி20 உலக கோப்பைத் தொடரில் மற்ற அனைத்து அணிகளை விடவும் பலம் வாய்ந்து விளங்குவதால் நிச்சயம் அவர்கள் கோப்பையை கைப்பற்றி பட்டைய கிளப்புவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆனால் அதே வேளையில், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் என தற்போது அரையிறுதிக்கு முன்னேறி இருக்கும் அனைத்து அணிகளுமே அதிக பலத்துடன் உள்ளனர். அது மட்டுமில்லாமல், ஐசிசி தொடரின் நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணி பல முறை தோல்வி அடைந்துள்ளது வெளியேறி உள்ளதும் ஒரு ஏக்கமான விஷயமாக தான் இருந்து வருகிறது.

சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள், நாக் அவுட் போட்டிகள் என வரும் போது கிரிக்கெட்டே தெரியாத ஆட்களை போல மாறி கையில் இருக்கும் லட்டு போன்ற வாய்ப்பையும் தவற விட்டு விடுவார்கள். ஆனால், அதே வேளையில் இந்த முறை அப்படி எந்தவித தவறும் நடக்காது என்பது தான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இதற்கு காரணம், பேட்டிங் என்ற விஷயத்தை தாண்டி பந்து வீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் என அனைவருமே தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது தான். பேட்டிங்கில் நாம் சில ஓட்டைகளை குறிப்பிட்டாலும் இந்திய அணியின் பந்து வீச்சுத் துறையை பொறுத்தவரையில் ஆபத்தான ஒன்றாக எதிரணியினருக்கு விளங்கி வருகின்றது.

- Advertisement 2-

அதிலும் பும்ரா விக்கெட்டுகளை தேவைப்படும் நேரத்தில் எடுப்பதுடன் மிகச்சிறந்த எகானமியை இந்த டி 20 உலக கோப்பைத் தொடரில் வைத்துள்ளார். இப்படி பல சிறப்பம்சங்கள் இந்திய அணியின் பக்கம் இருப்பதால் இந்த தடவை மிஸ் ஆகாது என்று தான் தெரிகிறது. இதனிடையே, இந்திய அணி பந்து வீச்சில் முறைகேடு செய்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ள கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

“இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் வீசிய 15 ஆவது ஓவரில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகத் தொடங்கிவிட்டது. ஒரு புதிய பந்து அத்தனை எளிதாக ரிவர்ஸ் ஆகுமா. அப்படி என்றால் அதற்காக 12, 13 வது ஓவரிலேயே அந்த பந்து தயாராகிவிட்டது. இதனால் போட்டி நடுவர்கள் கண்ணை திறந்து கொண்டிருக்க வேண்டும். எங்களுக்கும் ரிவர்ஸ் ஸ்விங் பற்றி சில விஷயங்கள் தெரியும். இதனால் அர்ஷதீப் சிங்கால் பந்தை ரிவர்ஸ் செய்ய முடியும் என்றால் நிச்சயம் அதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது.

பும்ரா ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார் என்றால் அவரால் அது முடியும் என்பது தெரியும். ஆனால் அர்ஷ்தீப் சிங் போன்ற ஒருவருக்கு பந்து ரிவர்ஸ் ஆகிறது என்றால் யோசித்து பார்க்க வேண்டிய விஷயம். ஒருவேளை பந்து அதிகம் அடிபட்டு அதன்மூலம் கூட ஸ்விங் ஆகியிருக்கலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் நிச்சயம் இதை சரியாக கவனிக்க வேண்டும். இதே பாகிஸ்தானில் இருந்து ஒரு வீரர் இப்படி செய்திருந்தால் நிச்சயம் இது பற்றி பெரிய அளவில் ஆவேசமான கருத்துக்களும் வெளியாகி இருக்கும்” என இன்சமாம் கூறியுள்ளார்.

சற்று முன்