2008 ஆம் ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு வரை ஐபிஎல் போட்டி வருடா வருடம் நடந்து வருகிறது. அதே போல் இதற்கான பார்வையாளர்களும் வருடா வருடம் பிரமிக்கும் அளவிற்கு அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த போட்டிக்கான பரிசு தொகையும் மிகப்பெரிய ஒரு தொகையாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வருட ஐபிஎல் பைனல் போட்டியானது குஜராத் ஐட்டம்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இதற்கு முன்பு இந்த இரண்டு அணிகளும் குவாலிஃபயர் சுற்றில் மோதினர். அதில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த குவாலிஃபயர் சுற்றி சென்னையில் நடைபெற்றது, இப்போது இந்த பைனல் சுற்று குஜராத் அணியின் ஹோம் கிரௌண்டான அகமதாபாத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் ஆரம்பித்த காலகட்டம் தொடங்கி இதன் பரிசுத்தொகையானது பலரும் பிரமிக்கும் வகையில் தான் இருந்து வந்துள்ளது. முதல் இரண்டு ஆண்டுகளில் ஜெயித்த அணிக்கு 4.8 கோடி ரூபாயும் தோற்ற அணிக்கு 2.4 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு குஜராத் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. அந்த அணிக்கு அப்போது 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கொடுக்கப்பட்டது.
அதே சமயம் கடந்த ஆண்டு ரன்னரப்பாக வந்த ராஜஸ்தான் ராயல் அணிக்கு 13 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வருடமும் அதே தொகை தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஸ்போர்ட்ஸ்டார் செய்தி நிறுவனம்(SPORTSTAR) செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஜெயிக்கும் அணிக்கு 20 கோடி ரூபாய்க்கும், தோற்கும் அணிக்கு 13 கோடி ரூபாய்க்கும் பரிசு தொகை வழங்கப்படும் என்று BCCI முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் மூன்றாவது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 7 கோடியும் நான்காவது இடத்தில் உள்ள லக்னோ அணிகளுக்கு 6.5 கோடியும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதே வேலையில் தனி தன்மையோடு ஜொலித்த வீரர்களுக்கும் மிகப்பெரிய தொகை பரிசாக கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அந்த வகையில் ஆரஞ்சு கேப் மற்றும் பர்பிள் கேப் வின்னர்களுக்கு தலா 15 லட்சம் கொடுக்கப்படும் எனவும் எமர்ஜிங் பிளேயருக்கு 20 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அதே சமயம் மோஸ்ட் வேல்யூப்பில் பிளேயர் என தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு 12 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: பென் ஸ்டோக்சின் சம்பளத்தில் கைவைத்த சிஎஸ்கே. அதுவும் எத்தனை கோடி தெரியுமா? காரணம் தான் அல்டிமேட்
குஜராத் அணியை பொறுத்தவரை கில் மிகப்பெரிய ஒரு ஃபார்மல் உள்ளார். குவாலிபயர் இரண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 129 ரன்களை 62 பந்துகளில் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை அணி வெற்றி பெற சுப்மன் கில்லை மிக விரைவில் வீழ்த்துவது தான் சிறந்த யுக்தியாக இருக்கும் என்று சென்னை ரசிகர்களின் கருத்தாக உள்ளது.