- Advertisement 3-
Homeவிளையாட்டுஇது ஐபிஎல் 2.0.. தோனி சிஎஸ்கேல இல்லாட்டியும் கவலைப்படாதீங்க.. பிசிசிஐ எடுத்த புது ரூட்.. உற்சாகத்தில்...

இது ஐபிஎல் 2.0.. தோனி சிஎஸ்கேல இல்லாட்டியும் கவலைப்படாதீங்க.. பிசிசிஐ எடுத்த புது ரூட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

- Advertisement-

இந்த ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் உலக அளவில் உயர்ந்து பார்க்கும் ஒரு தொடர் என்றால் ஐபிஎல் தான். கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பமான ஐபிஎல் தொடர் தற்போது வரையிலும் அதே பொலிவுடன் ரசிகர்களை ஈர்த்து வருவதுடன் மட்டுமில்லாமல் கொஞ்சம் கூட சலிப்பு இல்லாமல் இயங்கி வருகிறது. இந்திய வீரர்கள் தொடங்கி பல சர்வதேச வீரர்கள் ஒரே அணியில் இடம் பிடிக்க ஒவ்வொரு போட்டிகள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு பந்துமே சுவாரஸ்யமாக இருந்து வரும்.

இதன் காரணமாக ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளுக்கும் ரசிகர்கள் அதிகம் உள்ளதால் இன்னும் எத்தனை சீசன்கள் போனாலும் ரசிகர்கள் கொஞ்சம் கூட போர் அடிக்காமல் ஐபிஎல் தொடரை நிச்சயம் ரசிப்பார்கள். அந்த அளவுக்கு சிறப்பான ஒரு அடித்தளத்தை அமைத்து ஒவ்வொரு ஆண்டுகளிலும் புதிய விதிகள் என போட்டியின் விறுவிறுப்பை பிசிசிஐ அதிகப்படுத்தி வரும் நிலையில் தற்போது ஐபிஎல் தொடரை போன்று மற்றொரு தொடரையும் ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisements -

தோனி தனது 43 வயதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த நிலையில் அடுத்த ஆண்டு அவர் ஆடுவாரா இல்லையா என்பதே மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறி உள்ளது. இதற்கு காரணம் அவரது வயது மற்றும் அவரது பேட்டிங் உள்ளிட்ட விஷயங்கள் தான் அவருக்கு பதிலாக வேறொரு வீரர் இடம் பிடித்தால் நிச்சயம் இன்னும் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் என்ன முடிவை சிஎஸ்கே எடுக்க போகிறது என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்கிடையே தற்போது ஐபிஎல் தொடரை போல மற்றொரு தொடரை பிசிசிஐ நடத்தப் போது பற்றி வெளியான தகவல்கள் தோனி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் சர்வதேச அளவில் ஓய்வு பெற்ற வீரர்கள் அனைவரையும் வைத்து டி20 லீக் தொடரை ஐபிஎல் தொடரை போல நடத்த திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது தான்.

- Advertisement-

ஐபிஎல் தொடரை போலவே இந்தியா மட்டுமல்லாமல் மற்ற சர்வதேச அணிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் இணைந்து ஆடுவார்கள் என தெரிகிறது. இதனால் தோனி சிஎஸ்கே அணியில் இடம்பெறாமல் போனாலும் இந்த தொடரில் வருங்காலத்தில் அவர் ஆடுவார் என்பதால் நிச்சயம் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் உள்ளிட்ட பல இந்திய வீரர்களும் ஆடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக மேலும் வெளியான தகவலின் படி, டி20 லீக் பற்றிய யோசனைகள் மட்டும் தான் தற்போது நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு இந்த தொடர் ஆரம்பமாகலாம் என்றும் தெரிகிறது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வீரர்கள் என்பதை தாண்டி ஐபிஎல் தொடரிலும் ஆடாமல் இருந்தால் தான் இந்த டி20 லீக்கில் தேர்வாவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

சற்று முன்