- Advertisement -
Homeவிளையாட்டுஐபிஎல் மெகா ஏலம்.. பஞ்சாப் உரிமையாளருடன் மோதிய ஷாருக் கான்.. மீட்டிங்கில் வெடித்த சர்ச்சை..

ஐபிஎல் மெகா ஏலம்.. பஞ்சாப் உரிமையாளருடன் மோதிய ஷாருக் கான்.. மீட்டிங்கில் வெடித்த சர்ச்சை..

- Advertisement-

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. பொதுவாக மெகா ஏலம் என வரும் போது நிறைய வீரர்கள் ஒரு ஐபிஎல் அணியில் தக்க வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற சூழலில் இந்த முறை அதில் சில மாற்றங்கள் வேண்டும் என்றும் அனைத்து அணிகள் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஒரு சில அணிகள் 5 முதல் 8 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இன்னொரு பக்கம் அணியில் இருக்கும் யாருமே வேண்டாம் என்றும் மொத்தமாக வெளியேற்றி புதிய அணியை அமைக்கலாம் என்றும் சில அணிகள் விரும்பி இருந்ததாகவும் தகவல் வெளியானது.

ஐபிஎல் மெகா ஏலத்தை விட, அது தொடர்பான முடிவுகளை பெரிய அளவில் விறுவிறுப்பை கூட்ட, பிசிசிஐ நிர்வாகத்தினர் மற்றும் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் இடையே மீட்டிங் ஒன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. அப்படி ஒரு சூழலில், இந்த சந்திப்பு பிசிசிஐ அலுவலகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் தெரிகிறது.

இதில், ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களும் ஒருவிதமான கருத்துக்களை கூறியதாகவும் தெரிய வருகிறது. இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் உரியமையாளர்களில் ஒருவரான ஷாருக் கானுக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement-

மும்பையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஷாருக் கானும், நெஸ் வாடியாவும் சில முடிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் மோதிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதில் ஷாருக் கான் நிறைய வீரர்களை மெகா ஏலத்திற்கு முன்பாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்பியதாக தெரிகிறது. ஆனால், இன்னொரு பக்கம் நெஸ் வாடியாவோ ஒட்டுமொத்தமாக அணியை கலைத்து மெகா ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என்றும் கூறி உள்ளதாக தெரிகிறது.

இரண்டு பேரும் வெவ்வேறு முடிவுகளை கூறியதால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் உருவானதாகவும், இதன் பெயரில் சற்று நேரம் அங்கே பரபரப்பு உருவானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதே போல, இம்பாக்ட் பிளேயர் விதி சிலருக்கு விருப்பமில்லை என்ற போதிலும் அவை அடுத்த சீசனிலும் தொடரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் இந்த சந்திப்பில் வீரர்களை தக்க வைத்துக் கொள்வது குறித்து எடுத்த முடிவுகள் பற்றி இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

சற்று முன்