- Advertisement -
Homeவிளையாட்டுஅடேங்கப்பா.. மெகா ஏலத்துக்காக இப்டி ஒரு பிளானா.. ப்ரீத்தி ஜிந்தாவின் ஸ்கெட்ச்.. கதறப் போகும் ஐபிஎல்...

அடேங்கப்பா.. மெகா ஏலத்துக்காக இப்டி ஒரு பிளானா.. ப்ரீத்தி ஜிந்தாவின் ஸ்கெட்ச்.. கதறப் போகும் ஐபிஎல் அணிகள்..

- Advertisement-

ஐபிஎல் தொடரில் 10 அணிகளும் கடந்த சில தினங்களாகவே மிக அதிரடியாக திட்டங்களை உருவாக்கி அடுத்த ஐபிஎல் தொடரை வெல்வதற்கான நோக்கில் பல முடிவுகளையும் நிச்சயம் எடுத்திருக்கும். ஐபிஎல் தொடரில் அனைத்து ஆண்டும் மினி ஏலம் நடந்தாலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடைபெறும்.

இதில் ஒவ்வொரு அணியில் கைவசம் நிறைய தொகை இருப்பதுடன் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்தமாக ஒரு அணியை புதிதாக உருவாக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். மேலும் தங்கள் அணியில் இருப்பவர்களையும் தொடர்ந்து தக்க வைத்து வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களை கூட ஏலத்தில் கூட எடுக்க முடியும். இப்படி பல சிறப்பம்சங்கள் மெகா ஏலத்தின் மூலம் கிடைக்கும் என்பதால் அனைத்து அணிகளுமே சிறந்த வீரர்களை சொந்தமாக்க போட்டி போடும்.

- Advertisement -

இதற்கிடையே, எந்த முறையும் இல்லாத அளவுக்கு 3 அணிகள் தங்களின் கேப்டன்களையே அணியில் இருந்து மாற்றிவிட்டு இளம் வீரர்களை நம்பி தயாராவதாக தெரிகிறது. டெல்லி, கொல்கத்தா மற்றும் லக்னோ உள்ளிட்ட அணிகள் முறையே ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், ராகுல் ஆகியோரை வெளியேற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் இறுதி முடிவு வரும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என்ற சூழலில், இன்னும் பல வித்தியாசமான முடிவுகளும் மற்ற அணிகள் எடுக்கும் என தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் தான் நடிகை ப்ரீத்தி ஜிந்தா உரிமையாளராக இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி, மிகப்பெரிய முடிவு ஒன்றை எடுத்து ஐபிஎல் மெகா ஏலத்தில் கம்பீரமாக காலடி எடுத்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement-

கடந்த 17 ஐபிஎல் தொடர்களில் டெல்லி, பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் தான் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை சொந்தமாக்கியது கிடையாது. இதில் ஒரு அணியான பஞ்சாப் கிங்ஸ், கடந்த ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் கேப்டன்சி உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக நல்ல அடித்தளத்தை அவர்களால் அமைக்க முடியவில்லை.

இதனிடையே, அடுத்த ஐபிஎல் தொடரில் எந்த தவறும் நடக்கக் கூடாது என்பதற்காக பெரிய முடிவை அவர்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி அர்ஷ்தீப் சிங், சாம் குர்ரான் உள்ளிட்ட வீரர்களை கூட சொந்தமாக்காத பஞ்சாப் கிங்ஸ், கடந்த ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பிய ஷஷாங் சிங் மற்றும் ப்ரப்சிம்ரன் சிங் ஆகிய இரண்டு பேரை மட்டும் தான் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு பேருமே Uncapped வீரர்கள் என்பதால் சுமார் 12 கோடிக்குள் அவர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிகிறது. இதனால் சுமார் 113 கோடி ரூபாய் வரையிலும் கொண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஐபிஎல் மெகா ஏலத்தில் கால்பதிக்க முடியும். மற்ற பல அணிகளும் வீரர்களை தக்க வைக்கவே 60 முதல் 75 கோடி வரை செலவு செய்ய உள்ளதால் அவர்கள் அதிகபட்சமாக 60 கோடி ரூபாயுடன் தான் மெகா ஏலத்தில் கலந்து கொள்வார்கள்.

இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சிறந்த வீரர்களை தேர்வு செய்வதில் சாதகமான வாய்ப்பும் கிடைத்துள்ளது. கடந்த முறையும் இதே போல நிறைய தொகை கைவசம் இருந்தும் அணியை கட்டமைக்க பஞ்சாப் கிங்ஸ் தவற அதனை இந்த முறை செய்யாது என்றும் தெரிகிறது.

சற்று முன்