Homeகிரிக்கெட்முகமது ஷமிக்கும் ஸ்கெட்ச் போட்ட ஐபிஎல் அணி.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. பற்ற வைத்த...

முகமது ஷமிக்கும் ஸ்கெட்ச் போட்ட ஐபிஎல் அணி.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. பற்ற வைத்த குஜராத் டைட்டன்ஸ்..

-Advertisement-

உலக கோப்பைத் தொடர் நடந்து முடிந்துள்ள சூழலில் அடுத்ததாக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்து வருகின்றனர். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் ஐபிஎல் தொடரை இப்போதே ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் பார்க்க காரணம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலம் தான். அந்த ஏலத்துக்கு முன்பாக மொத்தமுள்ள பத்து அணிகளும் தங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. தொடர்ந்து புதிதாகவும் பல வீரர்கள் தங்கள் பெயரை ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.

எந்த வீரர்கள் எந்த அணிக்காக ஐபிஎல் தொடர் ஆடுவார்கள் என்பது பற்றியும் எந்த வீரருக்காக அணிகளுக்குள் போட்டி நிலவும் என்பதை பற்றி அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் இப்போதில் இருந்தே ஆவலாக உள்ளனர். இது ஒரு புறம் இருக்க, ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை எடுத்தால் அவர்கள் இன்னும் பலம் பெறுவார்கள் என்பது குறித்த பல்வேறு டிப்ஸ்களையும் கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் பிரபலங்கள் வழங்கி வருகின்றனர்.

-Advertisement-

இதனால் இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான தொடருக்கு மத்தியில் ஐபிஎல் தொடர்பான கிரிக்கெட் செய்திகளும் அதிகம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த ஐபிஎல் சீசனில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய அதிசயமான முடிவாக பார்க்கப்படுவது ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தது தான்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இரண்டு சீசன்கள் கேப்டனாக செயல்பட்டு ஒரு முறை கோப்பையை வென்று கொடுத்ததுடன் மட்டுமல்லாமல் இன்னொரு முறை இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்தார். இரண்டு சீசன் மட்டுமே குஜராத் அணிக்கு ஆடிய ஹர்திக் பாண்டியா, மீண்டும் டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் வாங்கப்பட்டுள்ளார். எந்த அணிக்காக சிறப்பாக ஐபிஎல் ஆடி சர்வதேச அளவில் தேர்வானரோ, அந்த அணிக்கே அவர் திரும்பி உள்ளது மும்பை ரசிகர்களுக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

-Advertisement-

முன்னதாக ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும் இந்த விருப்பத்தை குஜராத்தனின் நிர்வாகம் ஏற்றுக்கொண்டு அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனிடையே, குஜராத் அணியின் சீஓஓ அரவிந்த் சிங் தற்போது பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக பேசி உள்ள அவர், “குஜராத் அணியிலுள்ள முகமது ஷமியை டிரேடிங் முறையில் வாங்க சில அணிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. டிரேடிங் முறையில் அணி மாற தனியாக அவரிடம் பேசி உள்ளனர்.

ஐபிஎல் நிர்வாக குழு விதிகளின் படி ஒரு வீரரை டிரேடிங் செய்ய வேண்டுமென்றால், வீரர்களிடம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தாமல், பிசிசிஐயிடம் விண்ணப்பித்து பின்னர் தான் அணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால் வீரர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவது நல்லதல்ல. இது தொடர்பான விதிகளை அனைத்து அணிகளும் சரியாக பின்பற்றுவதை கவனிக்க வேண்டும் என பிசிசிஐக்கு கோரிக்கை வைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்