- Advertisement 3-
Homeவிளையாட்டுஇத மட்டும் எப்படியாச்சும் பண்ணிடுங்க.. ரோஹித் ஆர்மிக்கு இர்பான் பதான் வைத்த கோரிக்கை..

இத மட்டும் எப்படியாச்சும் பண்ணிடுங்க.. ரோஹித் ஆர்மிக்கு இர்பான் பதான் வைத்த கோரிக்கை..

- Advertisement 1-

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடரை அபாரமாக வென்றுள்ள இந்திய அணிக்கு அடுத்து மிகப்பெரிய சவாலாக காத்திருப்பது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தான். இந்தியா மற்றும் இங்கிலாந்து என் இரு பெரும் அணிகள் மோதும் சூழலில் இந்தியாவில் வைத்து நடைபெறும் இந்த தொடர் நிச்சயம் முழுக்க முழுக்க பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மண்ணில் போட்டிகள் நடந்தாலே இந்திய அணியை நிச்சயம் அசைத்துப் பார்ப்பது மிகக் கடினமான ஒன்றுதான். ஆனால் சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடி ஆட்டத்தை கடைப்பிடித்து வரும் இங்கிலாந்து அணி, நிச்சயம் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சு தாக்குதலை எதிர்கொள்வதற்கான வழிகளை அறிந்து அதற்கேற்ப தங்களின் திட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி காணவும் முயற்சி செய்யலாம் என்றும் தெரிகிறது.

ஒரு பக்கம் சாதகங்கள் அதிகமுள்ள இந்திய அணி, இன்னொரு பக்கம் அதிரடி ஆட்டத்துடன் இங்கிலாந்து அணி என இரண்டு பேருமே தங்களின் ரூட்டில் பலமாய் இருப்பதால் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் இந்த தொடரை எதிர்நோக்கி வருகின்றனர். ஜனவரி 25 ஆம் தேதி ஆரம்பமாகும் இந்த டெஸ்ட் தொடர், மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா, கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்களும் இங்கிலாந்தில் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஆண்டர்சன் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்களும் இருப்பதால் இந்த தொடர் பட்டையை கிளப்ப போகிறது என்பது தான் கிரிக்கெட் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

- Advertisement 2-

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் இந்திய அணிக்கும் ரோஹித் சர்மாவிற்கும் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். “பேஸ்பால் என்ற பெயரில் அதிரடி ஆட்டத்தை இங்கிலாந்து அணி தற்போது கடைபிடித்து வருகிறது. அவர்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கும் இந்திய ஆடுகளங்களில் எப்படி ஆடப் போகிறார்கள் என்பதை பார்க்கவே ஆவலாக உள்ளது. அப்படிப்பட்ட இங்கிலாந்து அணியை இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் போது நாம் அதிகம் கொண்டாட மாட்டோம். ஆனால் அனுபவமிக்க வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து அணியை ஐந்து போட்டிகளிலும் இந்திய அணி வென்று ஒயிட் வாஷ் செய்தால் அது மிகவும் வித்தியாசமான உணர்வாக இருக்கும்” என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

சற்று முன்