- Advertisement 3-
Homeவிளையாட்டுஇத கவனிச்சீங்களா.. ருதுராஜோட தரம் என்னன்னு இதுவே சொல்லுது - இர்பான் பதான் வெளியிட்ட பதிவு

இத கவனிச்சீங்களா.. ருதுராஜோட தரம் என்னன்னு இதுவே சொல்லுது – இர்பான் பதான் வெளியிட்ட பதிவு

- Advertisement-

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் வீரர் மிட்செல் மார்ஸ் முதல் ஓவரிலேயே முகமது ஷமியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

10 ஓவர்களை வீசிய ஷமி 51 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். தொடர்ந்து தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயன் பட்டத்தை தட்டிச் சென்றார். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விட்டெட்டுகளையும் இழந்து 276 ரண்களை குவித்தது.

- Advertisements -

இதனைத் தொடர்ந்து 277 ரன்களை குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். தொடக்க வீரரான ரோஹித் சர்மாவுக்கு இரண்டு போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் ருதுராஜ் தொடக்கத்தில் களமிறக்கப்பட்டார்.

தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தும் விதமாக ருதுராஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். இந்த அரை சதமானது சர்வதேச ஒருநாள் போட்டியில் ருதுராஜ் அடித்த முதல் அரை சதமாகும். தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 77 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement-

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசிவரை தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கேப்டன் கே.எல். ராகுல் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தோனி ஸ்டைலில் வெற்றிக் கணியை பறித்தார்.

இந்திய அணி இந்த வெற்றியை ருசித்ததற்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்த தொடக்க வீரர் ருதுராஜை பாராட்டி இர்பான் பதான் இன்று (செப்.23) தனது X சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “ருதுராஜின் அந்த இரண்டு பேக்ஃபுட் பஞ்சானது அவர் ஒரு திறமையான பேட்ஸ்மென் என்பதை வெளிப்படுத்தின” என குறிப்பிட்டுள்ளார்.

அவர் அப்படி குறிப்பிட காரணம், பொதுவாக கிரிக்கெட்டில் அதுபோன்ற ஷாட்களை ஆடுவதென்பது மிக கடினமான ஒன்று. ஆனால் ருதுராஜ் அதை கையாண்டார் என்பதால் தான். இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணி வீரர்களில் அபாரமான ஆட்டத்தைக் கண்டு பாராட்டு தெரிவித்து வந்த நிலையில் ருதுராஜின் ஆட்டத்தை உன்னிப்பாக கவனித்து அந்த விஷயத்தை இர்பான் பதான் குறிப்பிட்டு கூறியது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.

சற்று முன்