- Advertisement -
Homeகிரிக்கெட்ஒடிசா ரயில் விபத்து நிவாரணத்திற்காக இத்தனை கோடிகளை அள்ளிக்கொடுத்தாரா தோனி? யுவேந்திர சகல் கொடுத்தது எவ்வளவு?

ஒடிசா ரயில் விபத்து நிவாரணத்திற்காக இத்தனை கோடிகளை அள்ளிக்கொடுத்தாரா தோனி? யுவேந்திர சகல் கொடுத்தது எவ்வளவு?

-Advertisement-

கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஒடிசா மாநிலத்தின் பால்ஷோர் பகுதியில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டதில் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மிகப்பெரிய விபத்தாக கருதப்படுகிறது. இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியான நிலையில் 1000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் மிகப் பெரிய விபத்தால் இந்திய மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பலரும் விபத்தின் மூலம் உயிரிழந்தவர்களுக்கும் அவர்தம் குடும்பத்துக்கும் இரங்கலை தெரிவித்துள்ளனர். இதில் பல பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் அடக்கம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, விபத்து பற்றி செய்தி வெளியானதும், தன்னுடைய டிவிட்டர் கணக்கில் இருந்து “ஒடிசாவில் நடந்த சோகமான சம்பவம் குறித்து நான் வருந்துகிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவாக குணமாக பிராத்திக்கிறேன்.” என ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. அதில் “இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக “முன்னாள் இந்திய கேப்டன் தோனி 60 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகவும், விராட் கோலி 30 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளதாகவும்” ஒரு தகவல் பரவியது.

-Advertisement-

இந்த தகவலின் உண்மை தன்மை பற்றி பார்க்கையில் அப்படி எதுவும் அவர்கள் கொடுத்ததாக நம்பத்தகுந்த ஊடகங்களிலோ, அல்லது அவர்களின் தரப்பில் இருந்தோ செய்திகள் வெளியிடப்படவில்லை. அதனால் இந்த தகவல்கள் வதந்திதான் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. சமூகவலைதளங்களில் வேண்டுமென்றே இப்படி ஒரு தகவலை சிலர் பரப்பி வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: வாட்டர் பாட்டில் தூக்கிட்டு வந்ததுக்கு 10 கோடியா. வசதி இருக்கலாம் அதுக்காக இப்படியா என பிரபல ஐபிஎல் அணியை கலாய்க்கும் ரசிகர்கள்.

இதுவரை அதிகாரப்பூர்வமாக இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் விரேந்திர சேவாக் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் முழுக் கல்விச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். அதே போல சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சகல் 1 லட்ச ரூபாய் கொடுத்து உதவி உள்ளார். இதை அவர் ஒரு வலைஒளி கேமிங் சேனல் வழியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்