- Advertisement -
Homeவிளையாட்டுஇந்த ஆட்டம் போதுமா கொழந்த.. ஒரே போட்டியில் இந்திய அணிக்கு எச்சரிக்கை மணி அடித்த இஷான்...

இந்த ஆட்டம் போதுமா கொழந்த.. ஒரே போட்டியில் இந்திய அணிக்கு எச்சரிக்கை மணி அடித்த இஷான் கிஷன்..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரையில் தற்போது மூன்று வடிவிலான போட்டிகளிலும் வீரர்களை தேர்வு செய்வதற்கு எந்த பஞ்சமும் இல்லாமல் இருந்து வருகிறது. அந்த அளவுக்கு முதல் தர போட்டிகளின் மூலம் இந்திய அணியின் வீரர்களை தேர்வு செய்யும் அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் இனி வரும் காலங்களில் இந்திய அணி இடம் பிடிப்பதே மிகப்பெரிய சவாலாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த சவாலை இன்னும் பலமா மாற்றுவதற்கான தொடர்களும் இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியா , இந்தியா பி, சி மற்றும் டி என நான்கு அணிகள் பிரிக்கப்பட்டு துலீப் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள நான்கு அணிகளில் இந்திய அணியில் ஆடிய வீரர்களும், இதுவரை வாய்ப்பு கிடைக்காத வீரர்களும் கலந்து பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

- Advertisement -

சுப்ன் கில், ருத்துராஜ், ஷ்ரேயஸ் ஐயர், அபிமன்யூ ஈஸ்வரன் உள்ளிட்டோர் இந்த நான்கு அணிகளின் கேப்டனாக இருந்து வரும் நிலையில் இதன் அடிப்படையில் இனிவரும் காலங்களில் உள்ள டெஸ்ட் தொடர்களின் இந்திய அணி அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் துலீப் டிராபி தொடரில் கிடைக்கும் வாய்ப்புகளை இளம் வீர்ர்கள் கச்சிதமாக பயன்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தொடருக்கு மத்தியில் தான் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்து ஒரு டெஸ்ட் போட்டியும் மீதம் இருப்பதால் அதில் தேர்வாவதற்கு பல இளம் வீரர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தினாலே போதும் என்றும் கருதப்படுகிறது.

- Advertisement-

இந்த நிலையில் ருத்துராஜ் தலைமை தாங்கி வரும் இந்தியா சி அணிக்காக கடைசி நேரத்தில் களம் இறங்கி இ்ஷான் கிஷன் தற்போது ஆடியுள்ள ஆட்டம் அவரது கம்பேக்கை நிரூபித்துள்ளது. இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் ஷான் கிஷன் 48 பந்துகளில் அரைச்சதம் அடித்த நிலையில், 126 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். இதில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் 14 போர்களையும் பறக்கவிட்ட இஷான் கிஷனை தற்போது பலரும் பாராட்டி வரும் நிலையில் இந்திய அணிக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் பிசிசி வருடாந்திர சம்பள பட்டியலில் இருந்து ஷான் கிஷன் பெயர் நீக்கப்பட்டு இருந்த நிலையில் ரஞ்சித் தொடரிலும் அவர் ஆடவில்லை. இதனால் இஷான் கிஷனுக்கான இந்திய அணி வாய்ப்பு மங்கி போன சூழலில் தற்போது துலீப் டிராபி தொடரில் தனது கம்பேக்கை நிரூபித்து இந்திய அணிக்கும் எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார்.

சற்று முன்