- Advertisement -
Homeவிளையாட்டுபோட்டியின் நடுவே நட்டு, போல்டை தூக்கி வீசி லக்னோ வீரரின் தலையை தாக்கிய SRH ரசிகர்கள்...

போட்டியின் நடுவே நட்டு, போல்டை தூக்கி வீசி லக்னோ வீரரின் தலையை தாக்கிய SRH ரசிகர்கள் – கடுப்பாகி பதிவு போட்ட ஜான்ட்டி ரோட்ஸ்

- Advertisement-

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.ல் போட்டி நேற்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியானது இரு அணிகளுக்குமே பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போட்டியாக பார்க்கப்பட்டது.

இதில் ஒருவேளை SRH தோற்றால் அந்த அணியானது பிளே ஆப் சுற்றை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதே போல லக்னோ அணி தோற்றால் பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பு என்பது மிக கடினமாக மாறும். இப்படியான ஒரு சவால் நிறைந்த காலமாக தான் இந்த போட்டி துவங்கியது.

இந்த போட்டியில் டாசை வென்ற SRH அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து சுமார் 181 ரன்களை குவித்தது. இதில் கிளாஸன் அதிகப்படியாக 47 ரன்களை நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த போட்டியின் 19வது ஓவரில் பலரும் விரும்பத்தகாத ஒரு சம்பவம் அரங்கேறியது.

ஆவேஷ் கான் 19வது ஓவரை வீச, அப்துல் சமாத் அதை எதிர்கொண்டார். அப்போது ஆவேஷ் கான் வீசிய பந்து
ஃபுல் டாசாக இடுப்புக்கு மேல சென்றது. அதன் காரணமாக அம்பயர் அதை நோ பால் என அறிவித்தார். அதனை தொடர்ந்து லக்னோ அணி DRS எடுக்க, அது நோ பால் இல்லை என முடிவு வெளியானது.

- Advertisement-

இந்த முடிவை கேட்டு அதிருப்தியான தென்னாபிரிக்க வீரர் கிளாசன் அம்பயரோடு வாக்கு வாதத்தில் ஈடுபட துவங்கினார். அதே சமயத்தில் SRH ரசிகர்களும் ஆத்திரமடைந்து லக்னோ வீரர்கள் மேல் நட்டு, போல்டை கொண்டு தாக்க துவங்கினர். இதன் காரணமாக ஆட்டம் அச்சமயம் நிறுத்தப்பட்டது.

ஆட்டம் முடித்த பிறகு இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜான்ட்டி ரோட்ஸ், SRH ரசிகர்கள் வீசிய நட்டு, போல்டு லாங் ஆனில் பீல்டிங் செய்த பிரேரக் மங்கட்டின் தலையை தாக்கிய என பதிவிட்டுள்ளார்.

சற்று முன்