- Advertisement -
Homeகிரிக்கெட்WTC Final: மத்தவங்களுக்கு தான் இது உலக டெஸ்ட் பைனல். ஆனா இந்த ரெண்டு பேருக்கும்...

WTC Final: மத்தவங்களுக்கு தான் இது உலக டெஸ்ட் பைனல். ஆனா இந்த ரெண்டு பேருக்கும் இது நாக் அவுட் போட்டி மாதிரி தான். கொஞ்சம் பிசிறு தட்டினாலும் சோலி முடிஞ்சிடும்.

-Advertisement-

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது இன்று ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற இருக்கிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி கோப்பையை இந்திய அணி கைப்பற்றவில்லை என்கிற குறையை போக்கிக் கொள்ள நல்ல வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி அசத்த இந்தியா காத்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணியும் முழு பலத்துடன் இந்த போட்டியில் களமிறங்க உள்ளதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் சீனியர் வீரர்களான உமேஷ் யாதவ் மற்றும் அஜின்க்யா ரஹானே ஆகியோருக்கு வெளிநாட்டு தொடர்களில் இதுவே கடைசி வாய்ப்பாக இருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. ஏனெனில் ஏற்கனவே கடந்த ஆண்டு மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியிலிருந்து கழட்டி விடப்பட்ட அனுபவ வீரர் ரஹானே அதன்பிறகு உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் என தனது திறனை வெளிகாட்டி இந்த வாய்ப்பினை பெற்றுள்ளார்.

அதோடு 35 வயதாகும் அவருக்கு பதிலாக இந்திய அணியில் ஏற்கனவே அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் தற்போது காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து வெளியேறியதால் மட்டுமே ரஹானேவிற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது, ஒருவேளை அவர் இந்த இறுதிப்போட்டியில் சொதப்பினால் நிச்சயம் அவரை வயதை காரணம் காட்டி வெளியேற்ற அதிக வாய்ப்பு உள்ளது.

-Advertisement-

அதேபோன்று மற்றொரு வீரராக 35 வயதான வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தற்போது தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய இஷாந்த் சர்மாவையே வயதை காரணம் காட்டி இந்திய அணி வெளியேற்றிய நிலையில் தற்போது உமேஷ் யாதவ் 35 வயதை தொட்டுவிட்டதால் அவரும் இன்னும் ஒரு சில போட்டிகளில் சொதப்பினால் கூட இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: இந்த ஐபிஎல்-ல் தோனி நான்பேட்டிங் கேப்டனாக செயல்பட்டதற்கான தந்திரம் இது தான். ஆர்.சி.பி-யோடு ஒப்பிட்டு தோனியின் சிறப்பை புரியவைத்த கிரிக்கெட் நிபுணர் பிரசன்னா அகோரம்

ஏனெனில் இந்திய அணியில் ஏற்கனவே பல இளம் வீரர்கள் தங்களது வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் உமேஷ் யாதவும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு வேண்டுமானால் இது பைனலாக இருக்கலாம். ஆனால் இந்த இரு வீரர்களுக்கும் இது நாக் அவுட் போட்டி போன்றது தான் என்று கூறலாம்.

-Advertisement-

சற்று முன்