- Advertisement -
Homeவிளையாட்டுஜடேஜாவின் நிலை இதுல ரொம்ப மோசமா இருக்கு... பயிற்சி போட்டியிலயாவது இதை பண்ணுங்க - இர்பான்...

ஜடேஜாவின் நிலை இதுல ரொம்ப மோசமா இருக்கு… பயிற்சி போட்டியிலயாவது இதை பண்ணுங்க – இர்பான் பதான் கருத்து

- Advertisement-

உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் சூழலில், 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 15 வீரர்களில் 14 வீரர்களும் தங்களின் ஃபார்மை நிரூபித்துள்ள நிலையில், ஒரேயொரு வீரர் மட்டுமே இன்னும் முழு ஃபார்மை வெளிப்படுத்தாமல் உள்ளார். அது வேறு யாரும் இல்லை இந்திய அணி ஆல்ரவுண்டர் ஜடேஜா தான்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பேட்டிங் ஆடிய ஜடேஜா, 36 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 35 ரன்கள் சேர்த்தார். டெய்லண்டர்களுடன் கூட அதிரடியாக விளையாடாமல், ஒவ்வொரு ரன்னாக சேர்த்து தனது பேட்டிங் சராசரியை முன்னேறிக் கொண்டார் என்றே சொல்லலாம்.

இதனால் ஃபினிஷிங் ரோலில் ஜடேஜா எப்படி செயல்படுவார் என்ற சந்தேகம் ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. ஏனென்றால் மற்ற அணிகளில் ஃபினிஷிங் ரோலில் ஆடும் வீரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள். ஆனால் இந்திய அணியின் ஜடேஜா 100 ஸ்ட்ரைக் ரேட்டில் கூட விளையாட முடியாமல் திணறி வருகிறார்.

2022ஆம் ஆண்டு முதல் ஜடேஜாவின் பேட்டிங்கில் ஒரு முறை மட்டுமே 100 ஸ்ட்ரைக் ரேட்டை கடந்து விளையாடி இருக்கிறார். இதனால் உலகக்கோப்பை தொடரில் ஜடேஜா முழு திறமையை கொண்டு வர பயிற்சி போட்டிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement-

இதுகுறித்து இர்ஃபான் பதான் பேசும் போது, பயிற்சி போட்டிகள் என்பது அணியில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்து கொள்வதற்காக தான். இந்திய அணி இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஜடேஜாவின் பேட்டிங்கை பரிசோதிப்பது, டீம் காம்பினேஷன் மற்றும் டெத் ஓவர்களில் விளையாடுவது போன்றவற்றில் உங்களை நீங்களே சோதித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாக்கர் யூனுஸ் பேசும் போது, பயிற்சி போட்டிகளை பயன்படுத்தி தங்கள் அணியில் உள்ள பிரச்சனைகளையும், பாதிப்புகளையும் அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ளார்.

சற்று முன்