- Advertisement -
Homeவிளையாட்டுஐபிஎல் கொண்டாட்டம்லாம் இப்போ முக்கியம் இல்ல. எங்களுக்கு இது தான் முக்கியம் என உடனடியா கிளம்பும்...

ஐபிஎல் கொண்டாட்டம்லாம் இப்போ முக்கியம் இல்ல. எங்களுக்கு இது தான் முக்கியம் என உடனடியா கிளம்பும் முக்கிய வீரர்கள்

- Advertisement-

ஒன்றரை மாதத்துக்கும் மேலாக கிரிக்கெட் ரசிகர்களின் பொழுதை ஆக்கிரமித்துக் கொண்ட இந்தியன் பிரீமியர் லீக் 2023 நேற்று முன் தினம் ஒரு வழியாக முடிந்தது. இதையடுத்து இந்திய அணி இப்போது, ​​WTC ஃபைனல் 2023–ல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

நேற்று முன் தினம்தான் ஐபிஎல் முடிந்துள்ள நிலையில் ​​இந்திய கிரிக்கெட் அணியின் நான்கு நட்சத்திரங்களுக்கு மட்டும் ஓய்வுக்கான நேரம் இருக்காது. சிஎஸ்கே vs குஜராத் ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் பங்கேற்ற ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, அஜிங்க்யா ரஹானே மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் போட்டி முடிந்த இரு தினங்களில் இன்று இரவு லண்டன் புறப்படவுள்ளதாக இன்சைடு ஸ்போட்ஸ்(inside sports) செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கும் மேலாக நீடித்த குழப்பமான இறுதிப் போட்டிக்குப் பிறகு, வீரர்கள் வீடு திரும்பியுள்ளனர். அங்கிருந்து லண்டன் புறப்படுவார்கள். இறுதிப் போட்டியின் நாயகன் ரவீந்திர ஜடேஜா லண்டன் செல்வதற்கு முன் சென்னையில் இருப்பார் என தெரிகிறது.

ஐபிஎல்-லில் விளையாடி முடித்த கலைப்பை போக்க அவர்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கப் போவதில்லை என்பது தெரிகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 7 ஆம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.

- Advertisement-

இதற்காக ஐபிஎல் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறாத அணிகளின் வீரர்கள் சில நாட்களுக்கு முன்பாகவே விராட் கோலி தலைமையில் இங்கிலாந்துக்கு சென்றனர். அதன் பின்னர் ப்ளே ஆஃப் போட்டிகள் முடிந்ததும் ரோஹித் ஷர்மா தலைமையில் சில வீரர்கள் இங்கிலாந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கதறியழுத சிஎஸ்கே ரசிகை. அப்படியே சில நிமிடங்களில் மாறிய அவருடைய ரீயாக்சன் அற்புதம் – வைரல் வீடியோ

ஆஸி அணியைப் பொறுத்தவரை கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ஆஸி வீரர்கள் சிலர் இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளனர். அங்குள்ள மைதானங்கள் இந்தியாவை விட ஆஸி அணியினருக்கு அவர்களின் தட்ப வெப்ப சூழ்நிலையை பொறுத்துப் பார்க்கும் போது ஏற்றவையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் இந்திய அணி வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும்.

சற்று முன்