சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் சேப்பாக்கத்தில் நடக்கும் போது போட்டியை கலகலப்பாகவும் விறுப்பாகவும் எடுத்து செல்ல, அந்த நேரத்து சூழ்நிலைகளுக்கு ஏற்ப தமிழ் பாடல்கள் மைதானத்தில் ஒலிக்க விடப்படுகின்றன. தோனி பேட் செய்ய வரும்போதெல்லாம் மாஸ் ஆன ரஜினி மற்றும் கமல் பாடல்கள் ஒலிபரப்பப் பட்டன.
அதே போல கடைசியாக நடந்த குவாலிபையர் போட்டியில் ஒலிபரப்பான தமிழ் பாடல் ஒன்றைக் கேட்டு ரசிகர்கள் எஞ்சாய் செய்து ஆடிய வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலானது. போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பீல்ட் செய்த போது விஜயகாந்த் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வானத்தைப் போல படத்தில் இடம்பெற்றிருந்த ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்ற பாடல் போடப்பட்டது.
அப்போது ஜடேஜா அந்த பாடலை கேட்டு ஜர்க் ஆகி ரசிகர்களிடம் உண்டாகும் வைபை பார்த்து புன்னைகை பூத்தார். இந்த பாடலுக்கும், ஜடேஜாவிற்கு இடையே ஏற்கனவே ஒரு தொடர்பு உள்ளது. அது குறித்து பல நாட்களுக்கு முன்பே அஸ்வின் ஒரு வீடியோவில் கூறி இருந்தார். அவர் கூறியது பின்வருமாறு,
நான் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும்போது பொதுவாகவே தமிழ் பாடல்களை தான் கேட்பேன். ஒருசமயம் ஜடேஜா என்னோடு இருக்கும்போது ஒரு தமிழ் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அதை கேட்ட அவர், இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதை போடுங்க என கேட்டார். அது அப்படி என்ன பாடல் என்று பார்த்தால், வானத்தை போல படத்தில் வந்த ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடல் தான் அது.
அதே பாடல் தற்போது ஸ்டேடியத்தில் ஒலித்த போது ரசிகர்கள் அனைவரும் படத்தில் இந்த பாடலுக்கு எப்படி ஆடுவார்களோ அதுபோல கைகளை விரித்து ஆடி ரசித்து மகிழ்ந்தனர். ஸ்டேடியமே இந்த பாடலை கொண்டாடியது என்று சொன்னால் கூட மிகையாகாது. எஸ். எ ராஜ்குமாரின் இசையில் உருவான அந்த பாடல் தற்போது ரசிகர்கள் பலராலும் மீண்டும் கேட்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்கலாமே: பதிரனாவின் சகோதரியை பார்த்துள்ளீர்களா? தோனி அவரிடம் சொன்ன சூப்பரான தகவல பத்தி அவரே போட்ட பதிவு இதோ.
ஜடேஜாவுக்கும் சென்னை அணிக்கும் இடையில் சில பிரச்சனைகள் எழுந்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக கிசுகிசுக்கள் எழுந்தன. அதற்க்கு ஏற்றார் போல போட்டிக்கு பிறகு தோனி ஆவேசமாக ஜடேஜாவிடம் பேசுவது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோவும் ரசிகர்களால் பகிரப்பட்டது. ஆனால் அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.