- Advertisement 3-
Homeவிளையாட்டுஇங்க நான் தான் கிங்.. எந்த வீரராலும் தொட முடியாத உயரம்... அசால்டாக தட்டித் தூக்கிய...

இங்க நான் தான் கிங்.. எந்த வீரராலும் தொட முடியாத உயரம்… அசால்டாக தட்டித் தூக்கிய ஜடேஜா

- Advertisement 1-

2023 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டை மிகவும் எதிர்பார்ப்புடன் அனைவரும் வரவேற்று வருகின்றனர். அதே வேளையில் கிரிக்கெட் பயணத்தில் இந்த ஆண்டு நடந்த மிகச் சிறப்பான தருணங்களையும் ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க இன்னொரு பக்கம் இந்த ஆண்டின் சிறந்த வீரர்கள் பட்டியலையும், சிறந்த அணிகள் பட்டியலையும் பல கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் நிபுணர்கள் பட்டியல் போட்டும் அதனை தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டும் வருகின்றனர்.

இதே போல இந்த ஆண்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள், அதிக விக்கெட் எடுத்த வீரர்கள், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் என ஒவ்வொரு விஷயத்திற்கும் பட்டியலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மிக முக்கியமான ஒரு விஷயத்தை நிறைவேற்றி அசத்தியுள்ளார் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா.

கடந்த 2022 ஆம் ஆண்டு, டி20 உலக கோப்பை தொடரை காயம் காரணமாக தவற விட்ட ரவீந்திர ஜடேஜா, 2023 ஆம் ஆண்டு முழுக்க அனைத்து போட்டிகளிலும் ஆடி இருந்தார். இந்தியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த ரவீந்திர ஜடேஜா, உலகக் கோப்பை தொடரிலும் 16 விக்கெட்கள் கைப்பற்றி இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறவும் பங்காற்றி இருந்தார்.

மேலும் ஜடேஜா 2023 ஆம் ஆண்டில் செய்த மிக முக்கியமான சம்பவமாக பார்க்கப்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தது தான். குஜராத் அணிக்கான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்திகளில் சென்னை அணியின் வெற்றிக்கு பத்து ரன்கள் தேவைப்பட்டது. அந்த இரண்டு பந்துகளில் முறையே சிக்ஸர் மற்றும் ஃபோர் அடித்து சென்னை அணியை வெற்றி பெற உதவினார்.

- Advertisement 2-

நிச்சயம் சிஎஸ்கே வெற்றி பெறாது என்ற ஒரு சூழலில் முடியாததை முடித்துக் காட்டிய ஜடேஜாவை அந்த அணியின் கேப்டன் தோனி தூக்கி சுற்றி இருந்தது மிகவும் நெகிழ்வான தருணமாகவும் இந்த ஆண்டு கிரிக்கெட் அரங்கில் பார்க்கப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட சிறந்த வீரராக இந்த ஆண்டு விளங்கிய ரவீந்திர ஜடேஜா, 66 சர்வதேச விக்கெட்டுகள் மற்றும் 613 ரன்களை குவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில் 50 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து 500 ரன்களைத் தாண்டிய ஒரே ஒரு ஆல் ரவுண்டர் என்ற சிறப்பையும் ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார். இந்தியாவிற்கு மிக முக்கியமான ஆல் ரவுண்டராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா, நிச்சயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றவும் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்