கிரிக்கெட் வீரர்களை பிடித்த ஜெய்லர் பீவர்..! வீரர்கள் மத்தியில் எகிறிய எதிர்பார்ப்பு.. லண்டன் நிலவரத்தை சொன்ன வீரர்

- Advertisement -

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் 4500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாகிறது. நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்தின் திரைப்படம் ரிலீஸ் ஆவதால் அது சாதாரண ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்களையும் ரஜினி காய்ச்சல் விட்டு வைக்கவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள் ஆவார்கள். தினேஷ் கார்த்திக்,அஸ்வின், முரளி விஜய் போன்ற பல வீரர்களும் பலமுறை ரஜினி குறித்து டிவிட்டு போட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் குறித்து தமிழக கிரிக்கெட் வீரர்கள் போட்டுள்ள டிவிட் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.

தற்போது லண்டனில் இருக்கும் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஜெயிலர் திரைப்படம் பார்ப்பதற்காக காத்திருப்பதாகவும் லண்டனில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் முதல் நாள் காட்சிகள் ஹவுஸ்புல்லாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சென்னை மட்டுமில்லாமல் லண்டனிலும் படம் மீதான எதிர்பார்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் நீண்ட நாட்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் ரிலீஸ் ஆகும்போது சென்னையில் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் படத்தை முதல் நாளில் பார்க்க ஆவலுடன் இருப்பதாக அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று பல கிரிக்கெட் கிளப்பகளிலும் ஜெய்லர் படத்திற்கான டிக்கெட்டுகள் கிடைக்கப்பெற்று இருக்கின்றன. இதனால் நாளை சென்னையில் முதல் நாள் முதல் காட்சிக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் மகேந்திர சிங் தோனி ரஜினியின் ஜெயிலர் படத்தை திரையரங்கில் பார்ப்பாரா என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்