- Advertisement -
Homeவிளையாட்டுநான் அதுக்கு ரெடியா தான் இருந்தேன்.. எல்லாம் ரோஹித், கம்பீர் கொடுத்த தைரியம் தான்.. ஆட்ட...

நான் அதுக்கு ரெடியா தான் இருந்தேன்.. எல்லாம் ரோஹித், கம்பீர் கொடுத்த தைரியம் தான்.. ஆட்ட நாயகன் விருது வென்ற ஜெய்ஸ்வால்..

- Advertisement-

இந்திய அணியில் தற்போது இளம் வீரர்களின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இதில் பல வீரர்கள் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தான் அதிக அளவில் ஈடுபட்டு துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த இரண்டு வடிவிலான கிரிக்கெட்டை தாண்டி டெஸ்ட் அரங்கிலும் கலக்கும் இளம் வீரர்கள் சற்று குறைவு தான்.

அதில் மிக முக்கியமான ஒருவர் தான் 22 வயதாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக டி கவனம் ஈர்த்த ஜெய்ஸ்வால், இந்திய அணியிலும் குறைந்த ஓவர் போட்டிகளில் இடம் பிடித்திருந்தார். ஆனால் அதே வேகத்துடன் டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்த அவர், ரோஹித் ர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கி பல சாதனைகளையும் புரிந்து வருகிறார்.

- Advertisement -

இதுவரை 11 டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடியுள்ள ஜெய்ஸ்வால், 1100 ரன்களை கடந்ததுடன் பல ஜாம்பவான்களின் சாதனைகளையும் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அடித்து நொறுக்கி உள்ளார். டி20 போட்டிகளில் ஆடுவது போல அதிரடி ஆட்டத்தை ஜெய்ஸ்வால் கையில் எடுத்து வந்தாலும் நெருக்கடியான நேரத்தில் நிதானமாக ஆடுவதிலும் கெட்டிக்காரர்.

சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டியில் மூன்று இன்னிங்சில் அரை சதமடித்திருந்தார். அதிலும் இரண்டாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரை சதமடித்ததுன் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருந்த ஜெய்ஸ்வால், ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

- Advertisement-

இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கில், கோலி, ராகுல், ரிஷப் பந்த் என பல முன்னணி பேட்ஸ்மேன்ள் இருந்தும் அவர்களை விட 22 வயதிலேயே முன்னிலையில் இருக்கும் ஜெய்ஸ்வால், வரும் நாட்களில் இந்திய டெஸ்ட் அணியின் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனா வலம் வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, வங்கதேச அணிக்கு எதிரான 2 து டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது வென்ற பின்னர் சில விஷயங்களை ஜெய்ஸ்வால் பகிர்ந்துள்ளார்.

எனது அணிக்காக என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ அதை சரியாக செய்து முடிப்பதாக கருதுகிறேன். சென்னையில் இருந்த சூழ்நிலையும், கான்பூர் மைதானத்தில் இருந்த சூழலும் வித்தியாசமாக இருந்தது. எனது அணிக்காக என்ன செய்ய முடியுமோ அதற்கான முயற்சியில் இறங்கி சிறப்பான ஆட்டத்தை கொடுத்திருந்தேன்.

வ்வொரு இன்னிங்சும் மிக முக்கியமானதாகும். அந்த கையில், எனது சிறப்பான ட்டத்துடன் நான் தயாராகவும் இருந்தேன். கேப்டன் ரோஹித்தும், கவுதம் கம்பீரும் தான் நான் எப்படி ஆட விரும்புகிறேனோ அதே வழியில் ஆட வைத்தனர். கொஞ்சம் ரன்னை அடித்து விட்டு சுதந்திரமாக ஆட வேண்டும் என்பது பற்றி தான் நாங்கள் முதலில் பேசி இருந்தோம். இந்த போட்டியையும் வெல்ல விரும்பி அதற்கான வழியில் தான் பயணம் மேற்கொண்டிருந்தோம்என ஜெய்ஸ்வால் கூறி ள்ளார்.

சற்று முன்