- Advertisement -
Homeவிளையாட்டுகோலி பாபர் மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல பா... இந்த வீரர் தான் உலகக்...

கோலி பாபர் மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல பா… இந்த வீரர் தான் உலகக் கோப்பைல கலக்க போறாரு… அடித்து சொன்ன ஜாக் காலிஸ்!

- Advertisement-

2023 உலகக் கோப்பை அக்டோபர் 5 அன்று மிக பிரம்மாண்டமாக இந்தியாவில் தொடங்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பைக்கான முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தும், உலக கோப்பைகளில் பெரும்பாலும் இறுதி வரை வந்து வெற்றி பெறாத நியூசிலாந்து அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதவுள்ளன. இந்தியா தனது முதல் ஆட்டத்தை சென்னையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடுகிறது.

இந்திய கண்டிஷனில் விளையாடுவதென்பது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற ஆசிய கண்டத்தை சாராத அணிகளுக்கு மிகவும் கடினமாக இருக்கும், ஏனென்றால் sena எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ,நியூசிலாந்து ,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பந்து பவுன்ஸ் ஆவது போல இந்தியாவில் பந்து பவுன்ஸ் ஆகாது. ஆகையால் இந்த உலகக் கோப்பையில் இந்தியா பட்டம் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.

உலகில் உள்ள பத்து தலைசிறந்த அணிகளாடும் இந்த உலகக் கோப்பையில் தலைசிறந்த வீரர்கள் பங்குப்பெற உள்ளதால் நடைபெறவிருக்கும் ஆட்டங்களில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது . இந்திய ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் அதேவேளையில் ,ஒரு சில ஆடுகளங்களை தவிர்த்து பெரும்பாலான ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சிக்கு சாதகமாக இருக்கும்.

இந்திய உலகக் கோப்பை 2023 திருவிழாவில் என்ன நடக்கும் என்பதை பல நாட்டு கிரிக்கெட் அறிஞர்கள் பல்வேறு விதமான கணிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஜாக் காலிஸ் இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் டாப் ரன் ஸ்கோரராக இருப்பார் என கணித்துள்ளார்.

- Advertisement-

இதுகுறித்து அவர் கூறுகையில்: “என் கணிப்பின் படி ஜோஸ் பட்லர் சிறந்த ரன் ஸ்கோரராக இருப்பார். அவருக்கு இந்திய சூழ்நிலைகள் நன்றாக தெரியுமென்பதால் அவரிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை நாம் எதிர்பார்க்கலாம். இங்கிலாந்து அணிக்கும் இந்த உலகக் கோப்பையை வெல்ல நல்லதொரு வாய்ப்பு இருக்கிறது”
என்று காலிஸ் கூறியுள்ளார்.

2019 உலகக் கோப்பையில் ஜாஸ் பட்லர் 11 ஆட்டங்களில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதம் என மொத்தமாக 312 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் கீ பிளேயராக செயல்பட்டார். உலகக் கோப்பை போட்டிகளையும் சேர்த்து அவர் இதுவரை மொத்தமாக 165 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4647 ரன்களை 41.49 என்ற சராசரியில் குவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் ஒடிஐ மற்றும் டி20 களில் சிறப்பாக விளையாடி வரும் ஜாஸ் பட்லர் ஐபிஎல்லிலும் சிறந்த ஆவரேஜ் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் இவர் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார். அனைத்து வகையான கிரிக்கெட் ஃபார்மட்களிலும் கலக்கி வரும் இவர் உலகக் கோப்பையில் எப்படி பெர்ஃபார்ம் செய்ய இருக்கிறார் என கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

சற்று முன்