- Advertisement 3-
Homeவிளையாட்டுஅமெரிக்கா பிட்ச்ல இருக்குற நல்ல விஷயம்.. சும்மா சும்மா குறை சொல்லாதீங்க.. - பும்ரா

அமெரிக்கா பிட்ச்ல இருக்குற நல்ல விஷயம்.. சும்மா சும்மா குறை சொல்லாதீங்க.. – பும்ரா

- Advertisement 1-

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனி ஒரு வீரராக பல போட்டிகளில் என்ன செய்தாரோ அதனை டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணிக்காக செய்து அசத்தி உள்ளார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா.

கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரை காயம் காரணமாக நழுவ விட்டிருந்த பும்ரா, இந்த டி20 தொடரில் முழு தகுதியுடன் இடம் பிடித்திருந்தார். ஐபிஎல் தொடரில் மும்பை வீரர்கள் பலர் சொதப்பிய போதிலும் எந்த போட்டியிலும் அதிக ரன்களை வாரிய வழங்காமல் விக்கெட்டுகளை மட்டுமே எடுப்பதில் குறிக்கோளாக இருந்தார் பும்ரா.

அப்படி ஒரு சூழலில் டி 20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை சந்தித்திருந்தது. பாகிஸ்தான் உள்ளிட்ட பல பெரிய அணிகளுக்கு உலக கோப்பை போட்டிகளில் சிம்ம சொப்பனமாக விளங்கி இருந்த அயர்லாந்து அணி, இந்திய அணிக்கும் சவால் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மிக அசால்டாக அயர்லாந்து பேட்ஸ்மேன்களை டீல் செய்திருந்தனர்.

இதனால் 16 ஓவர்களிலேயே பரிதாபமாக ஆல் அவுட்டான அயர்லாந்து அணி, 96 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தது. டெலானியை தவிர எந்த வீரரும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போக, மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தது அயர்லாந்து அணி. இதன் பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி மிக எளிதாக அதனை எட்டிப் பிடிக்க, ரோஹித் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தனர். மேலும் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அவர்கள் வெற்றியும் பெற்றிருந்தனர்.

- Advertisement 2-

இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளையும், அர்ஷதீப் சிங் 2 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர். இதில் பும்ரா மூன்று ஓவர்கள் மட்டுமே வீசி ஒரு ஓவர் மெய்டன் செய்ததுடன் ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இதற்கு பின் பேசியிருந்த பும்ரா, “இந்தியாவில் இருந்து அமெரிக்கா வரும் போது பந்து சாதகமாக செயல்படும் பட்சத்தில் பிட்ச்சை நாம் குறை கூறவே கூடாது. டி20 போட்டிகளை பொருத்தவரையில் நீங்கள் அந்த சூழலுக்கு ஏற்ப அதிக ஆக்டிவ்வாக இருக்க வேண்டும். மேலும் உங்களின் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி அதிலே பலமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனக்கு இந்த முறை கை கொடுத்திருந்தது.

மேலும் இது போன்ற சூழ்நிலையில் அனைத்து ஏரியாக்களையும் நீங்கள் சரி செய்ய வேண்டும். எதற்கும் தயாராக இருந்து இது போன்ற முடிவு வரும் போது மகிழ்ச்சியாக உள்ளது” என பும்ரா கூறி உள்ளார்.

சற்று முன்