இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியானது சூப்பர் போர் சுற்றின் போது தோல்வியை சந்தித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதோடு சமீப காலமாகவே ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இவ்வேளையில் அந்த அணி தோல்வியை சந்தித்தது தற்போது சில முரண்பாடுகளையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஏற்கனவே பாபர் அசாம் அணி வீரர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று செய்திகள் வெளியாகியிருந்த வேளையில் துணைக்கேப்டன் சதாப் கான் அணியிலிருந்து மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு வரப்போகிறார்கள் என்ற பேச்சுகள் நிலவி வருகிறது.
அதோடு பாகிஸ்தான் அணியின் புதிய துணை கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி நியமிக்கப்படுகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்ற இந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்வி அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு தற்போது பாகிஸ்தான் அணி சற்று நம்பிக்கை இழந்தும் காணப்படுகிறது. ஆனால் ஆசிய கோப்பை தொடரில் பார்த்ததுபோல அல்லாமல் வேறு ஒரு அணியாக நாங்கள் உலக கோப்பைக்கு திரும்பி வருவோம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவித் மியான்தத் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் இலங்கை அணியோடு மோதிய போட்டிகளில் பாக்கிஸ்தான் அணி சரியாக செய்லபடவில்லை. ஆனால் அதற்காக பாபர் அசாமை மட்டும் ஏன் குற்றம் சாட்ட வேண்டும். ஆசிய கோப்பையில் விளையாடி அளவிற்கு பாகிஸ்தான் அணி அவ்வளவு மோசம் கிடையாது. உலககோப்பையில் சிறப்பாக விளையாடும் அளவிற்கான விலிமை பாக்கிஸ்தான் அணியிடம் உள்ளது.
தற்போது ஒரே விஷயம் என்னவென்றால் இந்தியாவில் உள்ள ரசிகர்கள் கூட்டத்திற்கு முன்பு விளையாடும் போது எங்களை நாங்கள் சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். உலகக்கோப்பைக்கான அணி குறித்த அறிவிப்பு எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு சீக்கிரம் பல சஸ்பென்ஸ் வெளிப்படும் என்று மியான்தத் பேசியது குறிப்பிடத்தக்கது.