- Advertisement -
Homeவிளையாட்டுஎந்த போட்டியிலும் விளையாட நான் இந்தியாவுக்கு செல்ல மாட்டேன். அது உலக கோப்பையாக இருந்தாலும் சரி...

எந்த போட்டியிலும் விளையாட நான் இந்தியாவுக்கு செல்ல மாட்டேன். அது உலக கோப்பையாக இருந்தாலும் சரி – பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கருத்து

- Advertisement-

இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் அரசியல் பிரச்சனைகள் காரணமாக இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் இருநாட்டு தொடர்களில் விளையாடுவதில்லை. பாகிஸ்தானின் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை.

இந்நிலையில் இந்த முறை ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடக்க இருந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்தது. இதனால் இப்போது ஆசியக் கோப்பை தொடரின் நான்கு போட்டிகள் மட்டுமே பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடக்க உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய அணி மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையிலும் மற்றும் நாக் அவுட் மற்றும் இறுதிப் போட்டி அனைத்தும் இலங்கையிலேயே நடக்க உள்ளது. இது பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டர்களை கோபப்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள பாகிஸ்தான் ஜாம்பவான் கிரிக்கெட்டர் ஜாவித் மியாண்டட் பிசிசிஐ-ஐ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் நட்பு ரீதியிலான தன்மை குறித்து “பாகிஸ்தான் 2012 இல் இந்தியாவுக்கு வந்துள்ளது, 2016 இல் கூட, இப்போது இந்தியர்கள் இங்கு வருவதுதான் முறை. நானாக இருந்தால் எந்த போட்டியாக இருந்தாலும்- உலகக் கோப்பையாக இருந்தாலும் கூட- விளையாட இந்தியாவுக்குச் செல்ல மாட்டேன். இந்தியாவுக்கு எதிராக விளையாட எப்போதும் தயாராக பாகிஸ்தான் உள்ளது. ஆனால் அவர்கள் ஒருபோதும் அதே முறையில் நம்மிடம் நடந்து கொள்வதில்லை” எனக் கூறியுள்ளார்.

- Advertisement-

மேலும் “பாகிஸ்தான் கிரிக்கெட் பெரியது. நாங்கள் இன்னும் தரமான வீரர்களை உருவாக்கி வருகிறோம். எனவே நாங்கள் இந்தியாவுக்குச் செல்லாவிட்டாலும், அது எங்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன்.” என்று அவர் பதிலளித்துள்ளார்.

மேலும் “ஒருவரால் அண்டை நாடுகளைத் தேர்ந்தெடுக்க முடியாது, எனவே ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வாழ்வது நல்லது என்று நான் எப்போதும் கூறுவேன். கிரிக்கெட் என்பது மக்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவரும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான தவறான புரிதல்களையும் குறைகளையும் நீக்கக்கூடிய ஒரு விளையாட்டு என்று நான் எப்போதும் கூறுவேன்.” என பேசியுள்ளார்.

சற்று முன்