என்னா மனுசன்யா… தன் செயலால் ரசிகர்களின் இதயங்களை வென்ற ஜாண்ட்டி ரோட்ஸ்- வீடியோ!

- Advertisement -

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை ரசிகர்கள் தாங்கள் ஆதரவு அளிக்கும் அணி தோற்றால் கூட அவ்வளவு அதிருப்தி அடையமாட்டார்கள். ஆனால் மழைக் காரணமாக போட்டி முடிவில்லாமல் போனால்தான் மிகவும் அதிருப்தி அடைவார்கள். அப்படி ஒரு போட்டியாகதான் நேற்று சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவில்லாமல் கைவிடப்பட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

இந்த போட்டி மழை காரணமாக டாஸ் மற்றும் ஆட்டம் தொடங்குவது சற்று தாமதமானாலும், போட்டி தொடங்கியவுடன் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. முதல் இன்னிங்ஸின் பெரும்பகுதி மழை குறுக்கீடு இல்லாமல் முடிக்கப்பட்டதன் மூலம் லக்னோ அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 125 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியுன் பதோனி அதிக பட்சமாக 33 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் சி எஸ் கே அணிக்கு வெற்றி எளிது என்ற சூழல் இருந்த போதுதான் மழை மீண்டும் குறுக்கிட்டது.

- Advertisement -

LSG அணியின் பேட்டிங் இன்னிங்ஸின் இறுதி ஓவரில் மழை வந்ததால் நடுவர்கள் போட்டியை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது தொடங்கிய மழை மீண்டும் நிற்கவே இல்லை. இதனால் இறுதியில், கட்-ஆஃப் நேரத்திற்கு முன்பு ஆட்டத்தை மீண்டும் தொடங்க முடியவில்லை. இதன் காரணமாக போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

- Advertisement -

மழை பெய்ய ஆரம்பித்த போது மைதான ஊழியர்கள் விக்கெட்டை மூடுவதற்காக படுதாக்களை இழுத்து வந்த போது, ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்து ரசிகர்களைக் கவர்ந்தது.  மழை குறுக்கீட்டின் போது, ​​எல்எஸ்ஜியின் பீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் மைதான ஊழியர்களோடு இணைந்து கவர்களை இழுத்து வந்தார். முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மைதான ஊழியர்களுக்கு உதவும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்