- Advertisement -
Homeவிளையாட்டுஉலக சாதனை படைத்த சி.எஸ்.கே குஜராத் மேட்ச். இதற்கு முன்பு கிரிக்கெட் போட்டியால் இப்படி ஒரு...

உலக சாதனை படைத்த சி.எஸ்.கே குஜராத் மேட்ச். இதற்கு முன்பு கிரிக்கெட் போட்டியால் இப்படி ஒரு சாதனை நிகழவில்லை என பூரிப்பில் ரசிகர்கள்.

- Advertisement-

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேற்று முதல் குவாலிபையர் போட்டியில் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 172 ரன்கள் சேர்க்க, அதை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 152 ரன்கள் மட்டுமே சேர்த்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த நிலையில் மைதானம் முழுவதும் சென்னை ஆதரவு மஞ்சள் படையாக இருந்தது. அதே போல இந்தியா முழுவதிலும் இருந்தும் இந்த போட்டியில் சென்னை அணிக்கே அதிக ஆதரவு இருந்தது. அதற்குக் காரணம் தோனி எனும் ஒரு மனிதர்தான். அவர் இந்த சீசனோடு ஓய்வு பெறக்கூடும் என சொல்லப்படும் நிலையில் அவருக்காக இந்தியா முழுவதும் ஆதரவு பெருகிக் கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டி மைதானம், தொலைக்காட்சி ஆகியவை தாண்டி ஓடிடியிலும் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸின் இறுதி ஓவரில் போட்டி ஒளிபரப்பான ஜியோ சினிமாவில் ஒரே நேரத்தில் 2.5 கோடி பார்வையாளர்கள் லைவ்வாக பார்த்துள்ளனர். ஏப்ரல் 17, 2023 அன்று நடந்த சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி போட்டியின் போது பதிவு செய்யப்பட்ட 2.4 கோடி ஒரே நேரத்தில் பார்வையாளர்கள் பார்த்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது.

ஆனால் நேற்றைய போட்டி அந்த சாதனையை முறியடித்துள்ளது. அதே போல இதற்க்கு முன்பு 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான செமி பைனல் போட்டியை 2.3 கோடி பேர் ஹாட் ஸ்டாரின் கண்டு கழித்தது தான் இதற்க்கு முந்தைய ஹாட் ஸ்டாரின் சாதனையாக இருந்தது.

- Advertisement-

ஹாட்ஸ்டாரின் சாதனையை ஜியோ சினிமாஸ் ஏற்கனவே முறியடித்த நிலையில், தற்போது ஜியோ சினிமாஸ் தன்னுடைய முந்தைய சாதனையை தானே முறியதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் கிரிக்கெட் போட்டியை ஒரே சமயத்தில் ஓடிடியில் கண்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் இதுவே தற்போதைய உலக சாதனை என்ற தகவலை பல முன்னணி செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் ஜியோ சினிமா ஐபிஎல் போட்டிகளை ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்து வரும் நிலையில், எந்த ஒரு கட்டணமும் இன்றி அனைவரும் இலவசமாக பார்க்கும் வகையில் இது இருப்பதால் பலரும் இந்த போட்டியை கண்டுள்ளனர். அதன் விளைவாக இந்த சாதனை நிகழ்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.

சற்று முன்