- Advertisement -

395 ரூபாயில் 84 நாள் வேலைக்கு கிடைக்கும். ஜியோ அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய ஸ்கீம்

JIO Rs 39 recharge plan : ஜியோவின் ரூ. 395 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரம்பற்ற 5G டேட்டாவை வழங்குகிறது. ஜியோவின் ரூ.395 திட்டம் பழைய சலுகையாகும், மேலும் பல வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் 5ஜி சலுகை காரணமாக இதை ஏற்கனவே ரீசார்ஜ் செய்கிறார்கள். இருப்பினும், இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதற்கு முன் சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ.395 ரீசார்ஜ் திட்டம்: ஜியோவின் ரூ.395 திட்டம் 84 நாள்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது. பயனாளர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. இத்திட்டம் அன்லிமிட்டட் கால் வசதி, 1000 எஸ்எம்எஸ் மற்றும் 6 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளாக அன்லிமிட்டட் 5ஜி டேட்டா, ஜியோ சினிமா, ஜியோ கிளவுடு மற்றும் ஜியோ டிவி ஆகியவையும் உள்ளன. ரிலையன்ஸ் ஜியோ ரூ.239க்கு மேல் உள்ள ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திலும் வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல்லில் இந்த சேவை இல்லை. ஏர்டெல் நிறுவனம் வரம்பற்ற 5ஜி டேட்டா சலுகையை ரூ.455 அல்லது ரூ.1799 திட்டங்களுடன் இணைக்கவில்லை. ஏனெனில் ரூ.455 மற்றும் ரூ.1799 திட்டங்கள் நுகர்வோர்களின் விருப்பத்தை பொருத்தது. ஆனால் ஜியோ அவ்வாறு செய்வதில்லை. அதன் மதிப்பு திட்டங்களுடன் கூட வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்குகிறது.

ஜியோவின் ரூ. 395 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரம்பற்ற 5G டேட்டாவை வழங்குகிறது. ஜியோவின் ரூ.395 திட்டம் பழைய சலுகையாகும், மேலும் பல வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் 5ஜி சலுகை காரணமாக இதை ஏற்கனவே ரீசார்ஜ் செய்கிறார்கள். இருப்பினும், இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதற்கு முன் சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ 395 திட்ட விவரங்கள்
ஜியோவின் ரூ.395 திட்டம் 84 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது. அன்லிமிட்டட் காலிங் வசதி, 1000 எஸ்எம்எஸ் மற்றும் 6 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளாக அன்லிமிட்டட் 5ஜி டேட்டா, ஜியோ சினிமா, ஜியோ கிளவுடு மற்றும் ஜியோ டிவி ஆகியவையும் உள்ளன. குறைவான செலவில் நிறைய டேட்டாவைப் பயன்படுத்த விரும்பினால் இதுவே உங்களுக்கான சரியான திட்டமாகும்.

இருப்பினும், ஜியோவின் 5ஜி நெட்வொர்க் கவரேஜின் கீழ் இல்லாதபோதோ அல்லது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க்குடன் இணைக்கப்படாதபோதோ, 4ஜி டேட்டாவைப் பயன்படுத்துவீர்கள். இந்த திட்டத்தில், அது 6 ஜிபி மட்டுமே கிடைக்கும். எனவே, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 4ஜி கவரேஜின் கீழ் இருக்கும்போதெல்லாம் டேட்டாவைப் பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது 5ஜி அனைத்து இடங்களிலும் கிடைக்கவில்லை. தற்காலிகத் தேவைக்காக மிகக் குறைந்த அளவிலான டேட்டாவைத் தேடுகிறீர்கள் என்றால், ஜியோ வழங்கும் டேட்டா வவுச்சர்களும் வெறும் ரூ. 15 முதல் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by