- Advertisement 3-
Homeவிளையாட்டுயுவராஜ் சிங் காத்து வந்த பொக்கிஷம்.. 17 வருஷம் கழிச்சு முதல் ஆளாக நெருங்கிய ஜோஸ்...

யுவராஜ் சிங் காத்து வந்த பொக்கிஷம்.. 17 வருஷம் கழிச்சு முதல் ஆளாக நெருங்கிய ஜோஸ் பட்லர்..

- Advertisement 1-

டி20 உலக கோப்பைத் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு யார் யாரெல்லாம் முன்னேறுவார்கள் என்பது தான் இன்னும் ஒரு சில போட்டிகளின் முடிவில் தெரிய வரும். சமீபத்தில் நடந்து முடிந்த சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் மோதி இருந்தது. முன்னதாக இங்கிலாந்து அணி லீக் சுற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வியடைந்தது.

இதனைத் தொடர்ந்து நடந்த சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியிலும் அவர்கள் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தனர். அப்படி இருந்தபோதிலும் அமெரிக்காவுக்கு எதிராக சிறந்த ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் நிச்சயம் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற வாய்ப்பும் உருவாகி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணியினரால் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமலே இருந்து வந்தது.

சிறிய இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்த நிலையில் தான் 19-வது ஓவரில் ஹாட்ரிக்குடன் சேர்த்து 4 விக்கெட்டுகள் எடுத்திருந்தார் க்றிஸ் ஜோர்டன். இதனால், அமெரிக்காவும் 115 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி இந்த இலக்கை 18 வது ஓவருக்குள் எட்டிப் பிடித்தால் அரையிறுதிக்கு முன்னேறிவிடலாம் என்ற வாய்ப்பும் இருந்தது.

அந்த வகையில் இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கி இருந்தாலும் பின்னர் போட்டியின் வேகத்தை அதிகரிக்க பத்தாவது ஓவருக்குள்ளாகவே இலக்கையும் எட்டி விட்டனர். கேப்டன் ஜோஸ் பட்லர் தொடக்க வீரராக களமிறங்கி 38 பந்துகளில் ஆறு ஃபோர்கள் மற்றும் ஏழு சிக்ஸர்களுடன் 83 ரன்கள் எடுத்திருந்தார்.

- Advertisement 2-

இதனால், டி 20 உலக கோப்பைத் தொடரில் முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கும் இங்கிலாந்து அணி முன்னேறி உள்ளது. இதனிடையே தென்னாபிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்படி ஒரு சூழலில் தான் யுவராஜ் சிங்கிற்கு பிறகு 17 ஆண்டுகள் கழித்து மிக முக்கியமான சாதனை ஒன்றை டி20 உலக கோப்பை தொடரில் ஜோஸ் பட்லர் படைத்துள்ளார். யுவராஜ் சிங் 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பை தொடரில் ஸ்டூவர்ட் பிராடிற்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்திருந்தார். அமெரிக்காவுக்கு எதிராக ஜோஸ் பட்லர் தற்போது ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் அடித்திருந்தார்.

யுவராஜ் சிங்கிற்கு பின்னர் தற்போது தான் ஒரு வீரர் டி20 உலக கோப்பை தொடரில் ஒரு ஓவரில் ஐந்து சிக்ஸர்களை அடித்துள்ளார். இதனால் டி20 உலக கோப்பையில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை ஒரே ஓவரில் அடித்த இரண்டு வீரர்களாக யுவராஜ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

சற்று முன்