- Advertisement 3-
Homeவிளையாட்டுநீ வேணா சண்டைக்கு வா.. இந்தியா மாதிரியே நாங்களும் ரெடியா இருக்கோம்.. சவால் விட்ட பட்லர்..

நீ வேணா சண்டைக்கு வா.. இந்தியா மாதிரியே நாங்களும் ரெடியா இருக்கோம்.. சவால் விட்ட பட்லர்..

- Advertisement 1-

நடப்பு டி 20 உலக கோப்பைத் தொடரில் மிக முக்கியமான இரண்டு போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் ஆடப் போகும் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் என நான்கு அணிகளும் சிறந்த ஃபார்மில் உள்ளனர். இதனால், இறுதி போட்டியில் முன்னேறுவதற்கும் அனைத்து அணிகளுக்குமே வாய்ப்பு உள்ளதாக தான் தெரிகிறது.

அதிலும் குறிப்பாக, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்றே சொல்லலாம். கடந்த டி 20 உலக கோப்பைத் தொடரில், இங்கிலாந்திற்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேற இந்த முறை அந்த தவறை நிச்சயம் ரோஹித் அண்ட் கோ செய்யமாட்டார்கள் என்றே தெரிகிறது.

ஆனால், அதே நேரத்தில் இங்கிலாந்து அணியையும் நாம் அந்த அளவுக்கு எளிதாக நினைத்து விட முடியாது. லீக் சுற்றிலேயே வெளியேறும் நிலைமையில் தான் இங்கிலாந்து அணி இருந்து வந்தது. ஆனால், ஆஸ்திரேலிய அணி ஸ்காட்லாந்தை வீழ்த்த, இங்கிலாந்தின் சூப்பர் 8 வாய்ப்பும் உறுதியாகி இருந்தது. இதே போல, சூப்பர் 8 சுற்றிலும் அமெரிக்காவை நல்ல ரன் ரேட்டில் வீழ்த்தி தற்போது அரையிறுதிக்கும் முன்னேறி உள்ளது.

ஒரு பக்கம் ரோஹித், பந்த், கோலி, பும்ரா, குல்தீப், சூர்யகுமார், ஹர்திக் என இந்திய அணியிலும் இன்னொரு பக்கம் ஜோஸ் பட்லர், பில் சால்ட், லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோ, ஆர்ச்சர், ஜோர்டன் என இங்கிலாந்து அணியிலும் இருப்பதால் முழுக்க முழுக்க அதிரடி நிறைந்து தான் இருக்கும் என தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் இந்திய அணிக்கு எதிரான போட்டி பற்றி இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

“இந்தியாவுக்கு எதிராக கடந்த டி20 உலக கோப்பையின் அரையிறுதியில் வென்றிருந்தது சிறந்த அனுபவம். அது மிகவும் ஸ்பெஷலான தினமும் கூட. இங்கிலாந்து ஜெர்சியில் நான் ஆடிய சிறந்த போட்டிகளில் ஒன்றாகவும் கருதுகிறேன். ஆனால் இந்த முறை அதிலிருந்து ஒட்டுமொத்தமாக வித்தியாசமான ஒரு இந்திய அணிக்கு எதிராக நாங்கள் ஆடப் போகிறோம். 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் தோல்வி அடைந்த பின்னர் தான் இந்திய அணியின் ஆட்டத்தில் ஒரு மாற்றம் உருவாகி இருந்தது.

ரோஹித் அணியை வழிநடத்தும் விதமும், அவர் பேட்டிங் செய்யும் விதமும் சிறப்பாக உள்ளது. மேலும் மிக சுதந்திரமாக இந்திய அணி வீரர்கள் ஆடுவதுடன் மட்டுமில்லாமல் ஆக்ரோஷமாகவும் ஆடி வருகின்றனர். அதேபோல இந்திய அணி வீரர்கள் தன்னம்பிக்கையுடனும் ஆடுவதால் நாங்களும் அதற்கு தயாராக தான் இருக்கிறோம். இந்திய அணி வீரர்கள் ஆக்ரோஷமாக இருப்பார்கள் என்பது நன்றாக தெரியும். நாங்களும் அதையே தான் செயல்படுத்த உள்ளோம்” என ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.

சற்று முன்