- Advertisement 3-
Homeவிளையாட்டு30 பந்து போதும்.. உலககோப்பைல ஏ.பி.டி சாதனையை கிளோஸ் பண்ண நினைக்கிறேன்.. ஆனால்.. தன் நிலை...

30 பந்து போதும்.. உலககோப்பைல ஏ.பி.டி சாதனையை கிளோஸ் பண்ண நினைக்கிறேன்.. ஆனால்.. தன் நிலை குறித்து ஜோஸ் பட்லர் பேச்சு..

- Advertisement 1-

மிஸ்டர் 360 என கிரிக்கெட் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராவார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் விக்கெட் கீப்பர் பேடஸ்மனாக முதலில் ஆடி வந்தார். பின் நாட்களில் அவர் விக்கெட் கீப்பிங் பணியை துறந்து முழுநேர பேட்ஸ்மனாக மாறி எதிரணியினரை துவம்சம் செய்தார். அவரது பேட்டிங் பார்பதற்கு பத்தாயிரம் வாலா சரவெடிகள் வெடிப்பது போல இருக்கும்.

ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக முதன் முதலில் களமிறங்கினார். அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2005 ஆம் வருடமும், சர்வதேச டி20 போட்டிகளில் 2006 ஆம் வருடமும் அறிமுகமானர். இவரின் 360° சுற்றி சுற்றி அடிக்கும் கிரிக்கெட் ஷாட்ஸ்க்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

கோரி ஆண்டர்சன் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 36 பந்துகளில் சதம் அடித்தது உலக சாதனையாக இருந்து வந்தது. ஆனால் அதை முறியடிக்கும் விதமாக அப்போதைய தென் ஆப்பிரிக்க கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் வெறும் 30 பந்துகளில் சதம் என்ற சாதனையை எட்டி உலகையே பிரம்மிப்படைய செய்தார். இந்த சாதனையை இதுவரை உலகில் எந்த ஒரு வீரரும் முறியடிக்க முடியவில்லை.

இதைப் பற்றி தனியார் கிரிக்கெட் நிறுவனம் ஒன்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜாஸ் பட்லரிடம் பேட்டி கண்டதுபோது இதுகுறித்து அவர் கூறுகையில்: ஏ.பி. டி வில்லியர்ஸ்சின் ரெக்கார்டை முறியடிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இருந்தாலும் நான் அதை முயற்சி செய்வேன். நான் 46 பந்துகளில் அதிவேக சதத்தை பூர்த்தி செய்துள்ளேன். எனவே மேலும் 16 பந்துகள் கம்மியாக எதிர்கொண்டு அவரின் சாதனை சதத்தை முறியடிக்க முயல்வேன். ஆனாலும் தற்போது வரை அது முடியாத ஒரு செயல் என்று தான் எனக்கு தோன்றுகிரியாது. அதனால் ஏ.பி. டி வில்லியர்ஸ்சின் ரெகார்ட் சேப்பாக தான் உள்ளது என்று அவர் கூறியுளளார்.

- Advertisement 2-

அவர் மேலும் கூறுகையில்: நான் ஷார்ஜா தட்பவெப்ப நிலையில் சதம் அடித்தது எனக்கு இதுவரை ஆடிய ஆட்டங்களில் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அந்தப் போட்டியில் முதல் பாதியில் பேட்டிங் செய்ய மிகவும் கடினமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் நான் 2018இல் வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 94 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்ததும் எனது சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகும் என கூறியிருந்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆன ஜாஸ் பட்லர் இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2907 ரன்களும், 165 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 4647 ரன்களும், 106 t20 போட்டிகளில் விளையாடி 2713 ரன்களும் எடுத்துள்ளார். அதிரடி ஆட்டக்காரரான ஜாஸ்பட்லர் சர்வதேச டி20 போட்டிகளில் அவரது இங்கிலாந்து அணிக்காக 144.1 என்ற ஸ்டிரைக் ரேட்டும், ஐபிஎல் போட்டிகளில் 148.3 என்ற ஸ்டிரைக் ரேட்டும் வைத்துள்ளார்.

சற்று முன்