ரோகித், கில், கோலி.. சூப்பர் 5 வீரர்களை வீழ்த்திய 20 வயது இளம் வீரர்? யார் இந்த துனித் வெல்லாலகே?

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக இலங்கை அணியின் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக இலங்கை அணியின் இளம் வீரராக வெல்லாலகே 42 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். இலங்கை அணி தோல்வியடைந்தாலும், 20 வயதேயான வெல்லாலகேவின் போராட்டத்தை பாராட்டி ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதனால் யார் இந்த வெல்லாலகே என்று ரசிகர்கள் பலரும் தேடி வருகின்றனர்.

- Advertisement -

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் அறிமுகமானவர் தான் துனித் வெல்லாலகே. இடதுகை சுழற்பந்துவீச்சாளரான இவர், நல்ல பேட்ஸ்மேனும் கூட. இந்திய அணிக்கு எப்படி ஒரு ஜடேஜா இருக்கிறாரோ, அப்படியான திறமையை இளம் வயதிலேயே வெளிப்படுத்தி வருபவர்.

கொழும்புவில் பிறந்த இவர் தான், கடந்த முறை நடைபெற்ற யு19 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியின் கேப்டன். அந்த யு19 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிராக இரு போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். இதன் காரணமாக யு19 உலகக்கோப்பை தொடரில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரரானார்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அரைசதம் என்று வெளுத்துக் கட்டியவர். டிவால்ட் பிரெவிஸ், யாஷ் துள், ஹர்சித் ராணா உள்ளிட்டோர் மீது பட்ட மீடியா வெளிச்சம், வெல்லாலகே மீது படாததால் ரசிகர்களுக்கு இவர் மீது அதிக ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அந்த உலகக்கோப்பையிலேயே அவர்களுக்கு நிகரான சம்பவங்களை செய்திருக்கிறார். யு19 ஆட்டத்தை பார்த்துவிட்டு உடனடியாக லங்கா பிரிமீயர் லீக் தொடரில் விளையாட ஜஃப்னா கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருக்கிறது. அங்கும் அசத்த, அதன்பின் தான் இலங்கை அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்றைய ஆட்டத்திற்கு முன் உலகக்கோப்பை அணிக்காக ரிசர்வ் வீரர்களில் இருந்த வெல்லாலவே, இனி பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்று பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்