கடந்த செவ்வாய்க்கிழமை 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை குறைத்தது. இதனால் அன்றைய தினமே தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.
நேற்று ஜூலை 28 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.இன்று சவரனுக்கு ₹400 குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 குறைந்து ₹51,320க்கும், கிராமுக்கு ₹50 குறைந்து ₹6,415க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ₹89.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. 4 நாள்களுக்கு பின், நேற்று முன் தினம் தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று குறைந்துள்ளது.