அந்த தப்பை மட்டும் பண்ணிறாதீங்க.. சோசியல் மீடியாவில் பொளந்துட்டு இருக்காங்க.. பாகிஸ்தான் வீரர்களுக்கு ரமீஸ் ராஜா எச்சரிக்கை

- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் ரசிகர்கள் அந்த அணியின் அனைத்து வீரர்களையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேற பாகிஸ்தான் அணி இலங்கை அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு முக்கிய ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார். அதில், பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் தொலைக்காட்சி மற்றும் சோசியல் மீடியாவை திறக்க வேண்டாம். என்னை பொறுத்தவரை பாகிஸ்தான் அணிக்கு சிறிய ஓய்வு தேவை என்று நினைக்கிறேன். இந்திய அணிக்கு எதிராக 2 நாட்கள் விளையாடி தோல்வியடைந்தது மனநிலையை பாதித்திருக்கும்.

- Advertisement -

தற்போது 3 நாட்கள் ஓய்வில் இருந்திருக்கிறார்கள். இந்த ஓய்வில் நாட்களில் இந்திய அணிக்கு எதிரான தோல்வியை பற்றி நினைக்க தேவையில்லை. அதேபோல் பயிற்சி தேவை என்று நினைத்த வீரர்கள் மட்டுமே பயிற்சியில் ஈடுபட்டால் போதுமானது. ஸ்விம்மிங் பூல் சென்று ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ரிலாஸ்க் செய்திருக்க வேண்டும்.

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைந்த பின், பாகிஸ்தான் வீரர்கள் தோல்விக்கு இவர்கள் தான் காரணம் என்று விரல் நீட்டி குறிப்பிட தொடங்கிவிட்டார்கள். அதுபோல் எந்த வீரரையும் குற்றம் சுமத்தக் கூடாது என்று நினைக்கிறேன். பாகிஸ்தான் அணியை கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக கட்டமைத்திருக்கிறார். இதனால் அடுத்த போட்டியில் பாகிஸ்தான் கம்பேக் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. அதேபோல் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கி இருப்பதால், இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படித்தியுள்ளது.

அதேபோல் கேப்டன் பாபர் அசாம் முதல் போட்டிக்கு பின் பெரியளவில் சோபிக்க தவறி வருவதும் அந்த அணியின் தோல்விக்கு காரணமாக உள்ளது. இதனை இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மாற்றுவார் என்று பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்