- Advertisement -
Homeவிளையாட்டுராகுலுக்கு எந்தந்த பகுதிகளில் காயம்… எஞ்சிய ஐபிஎல் போட்டியில் இருந்து விலகல்?

ராகுலுக்கு எந்தந்த பகுதிகளில் காயம்… எஞ்சிய ஐபிஎல் போட்டியில் இருந்து விலகல்?

- Advertisement-

மே 1 ஆம் தேதி நடந்த ஐபிஎல் சீசன் 16- 43 ஆவது போட்டியில் லக்னோ மற்றும் பெங்களுர் அணிகள் மோதின. இந்த போட்டியில் பீல்டிங் செய்யும் போது இந்திய தொடக்க ஆட்டக்காரரும் எல்எஸ்ஜி கேப்டனுமான கே எல் ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் முதல் இரண்டாவது ஓவரிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக க்ருனாள் பாண்ட்யா கேப்டனாக செயல்பட்டார். இதன் காரணமாக ராகுல் நம்பர் 11 இல்தான் பேட்டிங் செய்தார், இருப்பினும் அவரால் விக்கெட்களுக்கு இடையே ஓட முடியவில்லை. இதனால் அவர் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்தது.

இந்நிலையில் அவர் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ளன. காலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு ஸ்கேன் எடுக்க மும்பைக்கு சென்ற அவர் இப்போது தேசிய கிரிக்கெட் அகாடெமியின் மருத்துவக் குழு கண்காணிப்பில் இருக்கிறார்.

ஸ்கேன் முடிவுகளைப் பொறுத்துதான் அடுத்த மாத தொடக்கத்தில் லண்டனில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் ராகுல் விளையாடுவாரா மாட்டாரா என்பது தெரியவரும். அவரது சிகிச்சையை கண்காணிக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமி (NCA) குழு, வியாழன் இரவு வரை அணி நிர்வாகம் உட்பட சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலும் ராகுல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் விளையாட மாட்டார் என்றே பேச்சுகள் எழுந்துள்ளன.

ராகுலில் விலகல் பற்றி எல்.எஸ்.ஜி நிர்வாகமோ அல்லது பிசிசிஐயோ முறையான அறிக்கையை வெளியிடாததால் ராகுலின் காயத்தின் தன்மை ஒரு ஊகமாக மட்டுமே உள்ளது. அவர் தொடை எலும்பு அல்லது இடுப்பு பகுதி காயத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement-

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, ராகுலுக்கு ஜெர்மனியில் ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, மேலும் அனைத்து காரணிகளும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. தொடர்ந்து காயங்களால் அவதிப்படும் ராகுல் அடுத்தடுத்து முக்கியமான தொடர்களை இழக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்