- Advertisement -
Homeவிளையாட்டுஅந்த ரெண்டே நாள் தான்.. ரோஹித், கோலி உலக கோப்பை ஜெயிக்க இத செஞ்சாலே போதும்.....

அந்த ரெண்டே நாள் தான்.. ரோஹித், கோலி உலக கோப்பை ஜெயிக்க இத செஞ்சாலே போதும்.. கைஃப் கொடுத்த ஐடியா..

- Advertisement-

டி20 உலக கோப்பை நெருங்கி வரும் நேரத்திலேயே அது பற்றிய பல்வேறு பிரபலங்களின் கருத்துக்களும் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக எப்படி ஐபிஎல் பற்றிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக இருந்ததோ அதே போல இனி அடுத்த ஒரு மாதத்திற்கு டி20 உலக கோப்பையை சுற்றிய விஷயங்கள் தான் பெரிய அளவில் பேசுபொருளாக இருக்கும்.

இதனிடையே இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடி இருந்த நிலையில், அதனை முடித்த கையோடு தற்போது உலக கோப்பைக்காக அமெரிக்காவுக்கும் சென்று விட்டனர். இந்திய அணியில் சில முக்கியமான வீரர்கள் இடம் பெறாமல் போனது அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தது. ஆனாலும், தற்போது இருக்கும் அணியே நிச்சயம் உலக கோப்பை வெல்வதற்கு சிறந்த அணி என்றும் பலர் ஆதரித்து வருகின்றனர்.

அதனை நிஜமாக்கும் வகையில் நிச்சயமாக அவர்கள் நல்ல ஆட்டத்தை லீக் போட்டியில் தொடங்கி இறுதிப் போட்டி வரை முன்னேறி வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் கடந்த ஆண்டு ஒரு நாள் உலக கோப்பையை நூலிழையில் தவற விட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, அதற்கெல்லாம் வட்டியும், முதலும் சேர்த்து இந்த டி 20 உலக கோப்பை வெல்வதையே பெரிய நோக்கமாக கொண்டுள்ளது என்றும் தெரிகிறது.

இதனிடையே இந்திய அணியின் சீனியர் வீரர்களாக இருக்கும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இது கடைசி டி 20 உலக கோப்பையாக இருக்கலாம் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் சில முக்கியமான கருத்துக்களை இந்த இரண்டு பேர் பற்றி தெரிவித்துள்ளார்.

- Advertisement-

“ரோஹித் ஷர்மா நீண்ட ஆண்டுகள் கிரிக்கெட் ஆட மாட்டார் என்பது அவருக்கே தெரியும். ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே இன்னும் அதிகமாக போனால் மூன்று ஆண்டு வரையும் ஆடுவார்கள். இதனால் உலக கோப்பையை சொந்தமாக்க இந்த இரண்டு பேருக்குமே இதுதான் கடைசி வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன்.

கடந்த ஆண்டு இவர்கள் உலக கோப்பையை அகமதாபாத் மைதானத்தில் கோட்டை விட்டிருந்தனர். இறுதி போட்டியில் கோப்பையை அவர்களிடமிருந்து ஆஸ்திரேலியா பறித்தது போல் ஆடி இருந்தனர். இதனால் இதயம் நொறுங்கி போக, ரசிகர்களும் ஏமாற்றமடைந்து போயிருந்தனர்.

மேலும் டி 20 உலக கோப்பையில் லீக் போட்டிகள், இந்திய அணிக்கு பெரிய அளவு கடினமாக இருக்காது என்று தெரிகிறது. பெரும்பாலும் சிறிய அணிகளாக இருப்பதால் இந்திய அணிக்கு இரண்டே போட்டிகள் தான் மிக முக்கியமானவை. அவை அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி. அந்த இரண்டு நாட்களுக்காக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருமே தயாராக இருக்கிறார்களா என்பது தான் கேள்வியே. இது ரோஹித் ஷர்மாவுக்கு மிகப்பெரிய சோதனையாகும்” என கைஃப் கூறி உள்ளார்.

சற்று முன்