வீடியோ: 11 பாலில் 50 ரன்…மொத்த அடித்தது 64… 47 வயதில் சரமாரியான ஆட்டம்… சாதித்து காட்டிய ஜாக் காலிஸ்

- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் நடைபெறுவது போன்று தற்போது பல்வேறு நாடுகளிலும் டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அமெரிக்காவில் கிரிக்கெட்டை ஊக்குவிக்க வேண்டும் என அண்மையில் மேஜர் லீக் டி20 தொடரானது நடத்தப்பட்டது. இந்நிலையில் அதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் டி10 லீக் தொடரானது நடைபெற்று வருகிறது.

மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் 25 போட்டிகள் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரானது ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அட்லாண்டா ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக உத்தப்பாவும், கலிபோர்னியா நைட்ஸ் அணிக்கு கேப்டனாக சுரேஷ் ரெய்னாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அதேபோன்று மோரிஸ்வில்லி யூனிவர்சிட்டி அணிக்கு கேப்டனாக ஹர்பஜன் சிங்கும், நியூ ஜெர்சி அணிக்கு கேப்டனாக கௌதம் கம்பீரும், நியூயார்க் வாரியர்ஸ் அணிக்கு கேப்டனாக மிஸ்பா உல் ஹக்கும், டெக்சாஸ் சார்ஜஸ் அணிக்கு கேப்டனாக பென் டக் ஆகியோரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சுரேஷ் ரெய்னாவின் கலிபோர்னியா அணியும், பென் டக் தலைமையிலான டெக்ஸாஸ் அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சுரேஷ் ரெய்னாவின் அணியானது நிர்ணயிக்கப்பட்ட பத்து ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே எனது 158 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் அந்த அணியின் துவக்க வீரரான ஆரோன் பின்ச் துவக்கத்திலேயே டக் அவுட்டாகி இருந்தாலும் 47 வயதான ஜாக் காலிஸ் 31 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 64 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். சிக்ஸ் மட்டும் பவுந்தரிகளை கணிகிட்டு பார்த்தால் 11 பந்தில் 50 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த வயதிலும் அவரது பேட்டிங் அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை தொடர்ந்து 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெக்ஸாஸ் அணி 10 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 112 மட்டுமே குவித்ததால் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்