- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்த டீம் கூடயே 300 ரன் அடிக்க முடியல.. நீங்க எப்படி இந்தியாவை வீழ்த்துவீங்க.. பாகிஸ்தான்...

இந்த டீம் கூடயே 300 ரன் அடிக்க முடியல.. நீங்க எப்படி இந்தியாவை வீழ்த்துவீங்க.. பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் வீரர் சரமாரி கேள்வி!

- Advertisement 1-

ஆசியக் கோப்பைத் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆசியக் கோப்பைத் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஹைபிரிட் மாடலில் நடக்கவுள்ளது. இது பாகிஸ்தானுக்கு சொந்த பிரச்சனையாக மாறியுள்ளது. சொந்த மண்ணில் நடக்க வேண்டிய ஆசியக் கோப்பைத் தொடரை தாரை வார்த்து கொடுத்துள்ளதால், கோப்பையை வெல்ல பாகிஸ்தான் அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

இதற்காக பயிற்சிப் போட்டிகளிலோ, பயிற்சி முகாமிலோ ஈடுபடாமல் பாகிஸ்தான் அணியினர் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என்று பாகிஸ்தான் அணி வென்று அசத்தியது. இருப்பினும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பாகிஸ்தான் பேட்டிங்கை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து கம்ரான் அக்மல் பேசும்போது, ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை முதலில் பேட்டிங் ஆடும் அணிகள் என்ன ஆனாலும் 300 ரன்களை கடக்க வேண்டும். மாடர்ன் டே கிரிக்கெட்டில் 300 ரன்களை கடக்க முடியவில்லை என்றால் வெற்றிபெறுவது சாதாரணமாக இருக்காது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணி இருமுறை முதலில் பேட்டிங் ஆடியது.

ஆனால் அந்த இருமுறையுமே பாகிஸ்தான் அணியால் 300 ரன்களை எட்ட முடியவில்லை. 2வது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி நிர்ணயித்த 301 ரன்கள் இலக்கை கூட பாகிஸ்தானின் டெய்லண்டர்கள் தான் சேஸ் செய்தார்கள். இப்படி சாதாரண அணிக்கு எதிராக கூட 300 ரன்களை குவிக்க முடியவில்லை என்றால், இந்தியாவை எப்படி ஆசியக் கோப்பையில் வீழ்த்த முடியும்.

- Advertisement 2-

பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் நல்ல மனநிலையுடன் பொறுப்பை உணர்ந்து பேட்டிங் செய்ய வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு வீரர் மட்டுமல்லாமல், அனைத்து பேட்ஸ்மேன்களும் ரன்கள் குவித்தால் மட்டுமே 300 ரன்கள் இலக்கை எட்ட முடியும் என்று அறிவுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் அணியால் 300 ரன்களை எட்ட முடியாததற்கு இலங்கையில் ஆடப்பட்ட பிட்சும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

இருப்பினும் ஆசியக் கோப்பை நெருங்கும் நேரத்தில் பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர்கள் அதிகமாக பதற்றமடைந்து வருகின்றனர். நாளுக்கு நாள் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ஆலோசனைகளுக்கு மேல் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சற்று முன்