- Advertisement -
Homeவிளையாட்டுரஹானேவை ஏலத்தில் எடுக்கும் போதும் தோனி எங்களிடம் சொன்னது இது ஒன்று தான். அவரை எடுக்க...

ரஹானேவை ஏலத்தில் எடுக்கும் போதும் தோனி எங்களிடம் சொன்னது இது ஒன்று தான். அவரை எடுக்க தோனி தான் காரணம் – சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன்

- Advertisement-

ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் பலங்களில் ஒன்றாக சொல்லப்படுவது. அணியின் ஒவ்வொரு வீரரின் உச்சபட்ச திறமையையும் வெளிக்கொண்டு வருவதுதான். மற்ற அணிகளில் வேண்டாம் என ஒதுக்கப்பட்ட பல பிளேயர்கள் சிஎஸ்கேவில் வந்து சிறந்த வீரர்களாக ஜொலித்துள்ளார்கள். அதற்கு ஷிவம் துபே மற்றும் அஜிங்க்யே ரஹானே போன்றவர்களே சிறந்த உதாரணம்.

இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக களமிறக்கப்பட்டார் ரஹானே. கடந்த ஆண்டு ஏலத்தில் மற்ற அணிகளால் அடிப்படை விலைக்குக் கூட கேட்கப்படாத அஜிங்யே ரஹானேவை அடிப்படைத் தொகைக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்தது.

இந்த சீசனில் ரஹானே 16வது சீசனில் 189.83 என்ற அபாரமான ஸ்டிரைக் ரேட்டுடன், ஆறு இன்னிங்ஸ்களில் 2 அரை சதங்கள் உட்பட 224 ரன்கள் குவித்தார். இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடி 17 ரன்கள் சேர்த்தது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. KKRக்கு எதிரான இன்னிங்ஸ் அவரது டி20 கேரியரின் மிகச்சிறப்பான இன்னிங்ஸாக அமைந்து அவருக்கு ஆட்டநாயகன் விருதையும் பெற்றுத் தந்தது.

இந்நிலையில் சிஎஸ்கே அணிக்குள் ரஹானே வந்தது குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார் சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன். ரஹானேவை அணிக்குள் கொண்டு வந்ததற்கான புகழ் மொத்தத்தையும் கேப்டன் எம்எஸ் தோனிக்குக் கொடுத்துள்ளார் காசி விஸ்வநாதன்.

- Advertisement-

ஐபிஎல் 2023 ஏலத்திற்கு முன் நடந்த வியூகக் கூட்டத்தில், ரஹானேவை ஏலத்தில் எடுக்குமாறு எம்எஸ் தோனி அணி நிர்வாகத்தை வலியுறுத்தினார் என்று கூறியுள்ள அவர்  ​​”ரஹானேவை மட்டும் ஏலத்தில் பெற முடிந்தால் அதைவிட சிறந்தது எதுவும் இல்லை” என்று தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ரஹானே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நீண்ட ஆண்டுகளாக விளையாடி வந்தார். அந்த அணிக்குக் கேப்டனாகவும் சில ஆண்டுகள் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். ஆனால் சமீபத்தில் அவரை ராஜஸ்தான் அணி கழட்டி விட்டது. அதன்பிறகு ஏலத்தில் கலந்துகொண்ட அவரை எந்த அணிகளும் ஏலத்தில் அடிப்படை விலைக்குக் கூட கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்