- Advertisement 3-
Homeவிளையாட்டுரோகித் கோலி எல்லாம் கிடையாது.. நம்ப கிட்ட 2 பேர் இருக்காங்க.. அவங்க தான் நமக்கு...

ரோகித் கோலி எல்லாம் கிடையாது.. நம்ப கிட்ட 2 பேர் இருக்காங்க.. அவங்க தான் நமக்கு உலகக்கோப்பையை ஜெயித்து தர போறாங்க – கவாஸ்கர் ஆருடம்

- Advertisement-

இந்தியாவில் எதிர்வரும் 50 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் தற்போது அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இவ்வேளையில் நேற்று இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது காயம் காரணமாக அணியில் இருந்து விலகியிருந்த கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். அதோடு மிடில் ஆர்டரில் இடதுகை வீரர் வேண்டும் என்பதினால் திலக் வர்மாவிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று பும்ரா, பிரசித் கிருஷ்ணா போன்றோரும் அணிக்குள் வந்திருக்கின்றனர்.

- Advertisements -

இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் பெரும்பாலும் உலக கோப்பை தொடருக்கான அணியிலும் இடம் பெறுவார்கள் என்பதனால் இந்த அணித்தேர்வு குறித்து தற்போது பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தேர்வு எப்படி அமைந்துள்ளது என்று சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்திய அணியின் டாப் ஆர்டரில் எந்த வீரர்களையும் மாற்ற நான் விரும்பவில்லை. ரோகித் சர்மா கீழே சென்று விளையாட வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. ஏனெனில் தற்போதைய இந்திய அணியின் டாப் ஆர்டர் மிகச் சிறப்பாக இருக்கிறது. அதே வேளையில் பின் வரிசையிலும் பேட்டிங் செய்யும் வீரர்கள் இருந்தால் பலமாக இருக்கும் என்றும் நினைத்திருக்கிறேன்.

- Advertisement-

விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தொடர்ந்து பந்துவீசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் சாம்பியன்ஷிப் வென்ற அணிகளை பார்க்கையில் பந்துவீசக்கூடிய டாப் ஆர்டர் வீரர்கள் இருப்பதை நாம் காண முடியும். ஏனெனில் பேட்ஸ்மேன்கள் பகுதி நேர பந்து வீச்சாளர்களாக கை கொடுத்தால் நிச்சயம் அது அணிக்கும் உதவியாக இருக்கும். தற்போதைய இந்திய அணியில் ஆல் ரவுண்டர்கள் தான் மிகவும் முக்கியமான வீரர்களாக இருக்கின்றனர்.

அந்த வகையில் ஹார்டிக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இணைந்து விளையாட இருப்பது இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலத்தை தரும். ஏனெனில் இவர்கள் இருவருமே முக்கியமான வீரர்கள். நம்மிடம் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் இறங்கும் வீரர்கள் சிறப்பாக இருக்கும் போது அது நமக்கு கூடுதல் பலம். பாண்டியா மற்றும் ஜடேஜாவால் நன்றாக பேட்டிங் செய்ய முடியும். அதே போன்று பந்துவீசி விக்கெட்டுகளையும் எடுத்து தர முடியும். அந்த வகையில் தற்போதைய இந்திய அணியில் நல்ல வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்

சற்று முன்