- Advertisement -
Homeவிளையாட்டுமுக்கிய வீரருக்குக் காயம்… கமெண்ட்ரி பண்ணிகிட்டு இருந்தவர டீமுக்குள்ள இழுத்துப் போட்ட ஆர் சி பி!

முக்கிய வீரருக்குக் காயம்… கமெண்ட்ரி பண்ணிகிட்டு இருந்தவர டீமுக்குள்ள இழுத்துப் போட்ட ஆர் சி பி!

- Advertisement-

16 ஆவது ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நடந்துவருகிறது. அனைத்து அணிகளும் சரிபாதி போட்டிகளான 8 போட்டிகளை விளையாடியுள்ளன. இந்நிலையில் அணியில் இடம்பெற்ற வீரர்கள் சிலரின் காயம் காரணமாக இப்போது புதிய வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெங்களூர் அணிக்காக சில போட்டிகளை விளையாடிய டேவிட் வில்லி காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகிறது. இதன் காரணமாக ஆர் சி பி அணி, அவருக்கு பதிலாக புதிய வீரரை ஒப்பந்தம் செய்துள்ளது.

அந்த வீரர் வேறு யாருமில்லை, ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்காக விளையாடிய கேதார் ஜாதவ்தான். ஐபிஎல் தொடரின் கடந்த சில சீசன்களாக அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. அதனால் அவர் இப்போது மராத்தி மொழியில் கிரிக்கெட் வர்ணனை செய்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர் விரைவில் பெங்களூர் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 38 வயதாகும் கேதார் ஜாதவ் இந்திய அணிக்காக 73 ஒரு நாள் போட்டிகளையும், ஐபிஎல் தொடரில் 93 போட்டிகளையும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர் அணியின் பலவீனமாக மிடில் ஆர்டர் பேட்டிங் உள்ளது. இதைப் பலப்படுத்ததான் அந்த அணி போராடி வருகிறது. மகிபால் லாம்ரோர், சுயாஷ் பிரபுதேசாஸ், தினேஷ் கார்த்திக் என அனைவரும் ரன்களைக் குவிக்க தடுமாறி வருகின்றனர். ஆர் சி பி குவிக்கும் ரன்களில் 70 சதவீதத்துக்கும் மேல் கோலி, டு பிளஸ்சி மற்றும் மேக்ஸ்வேல் ஆகிய மூவர் குவிப்பதாகவே உள்ளது.

- Advertisement-

இந்நிலையில் கேதார் ஜாதவ் அணிக்குள் வருவதால் பேட்டிங்கில் முன்னேற்றம் இருக்கும் என நம்பப்படுகிறது. அதே போல கடந்த சில ஆண்டுகளாக அவர் கிரிக்கெட் போட்டிகள் விளையாடவில்லை என்பதால் உடனடியாக ஆடும் லெவனில் இடம்பிடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர் சி பி 4 போட்டிகளில் தோற்று, 5 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்