- Advertisement 3-
Homeவிளையாட்டுநான் சவால் விட்டது போதும்.. கூனி குறுகி போன பீட்டர்சன்... சைலண்டாக பதில் சொன்ன இந்திய...

நான் சவால் விட்டது போதும்.. கூனி குறுகி போன பீட்டர்சன்… சைலண்டாக பதில் சொன்ன இந்திய அணி!..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாக இது பற்றி பல விதமான கருத்துக்களும் எதிர்பார்ப்புகளும் இருந்து வந்தது. அதிலும் குறிப்பாக, இங்கிலாந்து அணியின் அதிரடி அணுகுமுறை நிச்சயம் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் உள்ளிட்ட பலர் ரோஹித் அண்ட் கோவை எச்சரித்திருந்தது.

இன்னொரு பக்கம், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கு மத்தியில் நிச்சயம் இங்கிலாந்தின் அதிரடி பேஸ்பால் ஆட்டம் எடுபடாது என்று பலரும் சூளுரை செய்திருந்தனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கூட, இங்கிலாந்து அணியின் அதிரடி போக்கு பற்றி சிந்திக்காமல், தங்களின் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்த போவதாக குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், இந்திய அணி தான் ஏறக்குறைய வென்றுள்ளது என சொல்ல வேண்டும். தங்களின் பேட்டிங்கை அதிரடியாக இங்கிலாந்து அணி தொடங்கினாலும் இந்திய அணியின் சூழல் தாக்குதல் ஆரம்பித்ததும் பெட்டி பாம்பாய் அடங்கி போகினர். அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் என மாறி மாறி இந்திய வீரர்கள் அவுட் எடுக்க, ஒன்றும் செய்ய முடியாமல் இங்கிலாந்து அணி திணறியது.

கடைசியில் 246 ரன்களுக்கு அவர்கள் அவுட்டாக, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக அடித்த 70 ரன்கள் மட்டும் அவர்களுக்கு ஆறுதலாக மிஞ்சி இருந்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணியில் இளம் வீரர் ஜெய்ஸ்வால், ஃபோர், சிக்ஸர் என நாலாபுறமும் பந்தை பறக்க விட்டார்.

- Advertisement 2-

இதனால், முதல் நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து அதிக பலத்துடன் திகழ்கிறது. இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் பேட்டிங் பற்றி புகழ்ந்தும், இந்திய அணியை எச்சரித்தும் போட்டிக்கு முன்பாக கருத்து தெரிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் மனமுடைந்து போயுள்ள விஷயம், இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் வந்ததும் அவர்கள் 450 ரன்கள் குவிப்பார்கள் என பீட்டர்சன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதாவது, முதல் நாளிலேயே தங்களின் அதிரடி ஆட்டத்தை ஆடி 450 ரன்கள் குவிப்பார்கள் என இந்திய அணியின் பவுலிங்கை விமர்சித்து தான் அப்படி குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இங்கிலாந்து அணி 246 ரன்களில் ஆல் அவுட்டாக, “இந்த போட்டி இரண்டு நாளில் முடிவடையக் கூடிய போட்டியாக இருக்கலாம்” என குறிப்பிட்டள்ளார். கடந்த சில தினங்களாகவே இந்திய அணியை விமர்சித்து அதிகம் வாய் பேசி வந்த கெவின் பீட்டர்சனுக்கு அவரது அணியே மோசமாக ஆடி வாயை மூட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்