- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலி ஆர்சிபில இருந்து விலகணும்.. இந்த டீம்க்கு அவர் ஆடுனா கப் கன்ஃபார்ம்.. பீட்டர்சன் கொடுத்த...

கோலி ஆர்சிபில இருந்து விலகணும்.. இந்த டீம்க்கு அவர் ஆடுனா கப் கன்ஃபார்ம்.. பீட்டர்சன் கொடுத்த ஐடியா..

- Advertisement 1-

ஆர்சிபி அணி, ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் தோல்வி அடைந்து ஒரு நாளான பின்னரும் இன்னும் இது பற்றிய கருத்துக்கள் இணையத்தில் ஓய்ந்த பாடில்லை. முன்னதாக சென்னைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆப் முன்னேறிய நான்காவது அணியாக ஆர்சிபி மாறிய போது அதனை ஒரு திருவிழாவை போல அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி இருந்தனர்.

ஒரு பக்கம் இந்த விஷயம் தான் பலரால் பாராட்டப்பட்டு வந்தாலும் அதனையும் தாண்டி சிஎஸ்கே ரசிகர்கள் சிலரை அவமதித்ததாகவும் ஆர்சிபி ரசிகர்கள் மீது விமர்சனம் இருந்தது. ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற இன்னும் மூன்று போட்டிகளில் ஆர்சிபி வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இப்போதே இதனை கொண்டாடுவது சரியா என்ற கேள்வியும் எழுந்திருந்தது. இதனிடையே ஆர்சிபி ஆட்டத்தை அடக்கும் வகையில் ராஜஸ்தான் அணி ஆட, உற்சாகமாக பிளே ஆப் முன்னேறிய பெங்களூரு அணியை அதே வேகத்தில் வெளியே அனுப்பிவிட்டனர்.

இதனால் ஆர்சிபி ரசிகர்கள் இன்னும் விமர்சனத்திற்கு உள்ளாக, அவர்களும் மனமுடைந்து போயினர். இதற்கு நடுவே ஒரு முக்கியமான வீரருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மனம் நொறுங்கி வருவதும் அரங்கேறி இருந்தது. 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் தற்போது வரை ஒரே அணிக்காக ஆடிவரும் விராட் கோலி, 17 ஆண்டுகளாக ஒரு கோப்பையை கூட கைப்பற்றாமல் ஆர்சிபியில் இருந்து தவித்து வருகிறார்.

பல ஐபிஎல் தொடர்களின் முக்கிய போட்டிகளில் தனது அணிக்காக அதிக ரன்கள் அடித்துக் கொடுத்துள்ள கோலி இந்த சீசனில் ஆரஞ்சு கேப் பெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். இப்படி பல பாசிட்டிவ்வான விஷயங்கள் அவரிடம் இருந்தும் ஒரு அணியாக ஆர்சிபி தடுமாறி வருவதால் தொடர்ந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் தவற விட்டு வருகின்றனர்.

- Advertisement 2-

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன், ஆர்சிபி அணியில் இருந்து கோலி விலக வேண்டும் என்ற கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். “கால்பந்து உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளில் ஒரு அணிக்காக சிறப்பாக ஆடியும் கோப்பை கிடைக்கவில்லை என்றால் மற்ற அணிகளில் எளிதாக போய் மாறிவிடுகிறார்கள். அதேபோல விராட் கோலி, ஆர்சிபி அணியில் இருந்து விலக வேண்டும். இந்த முறையும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்து ஆரஞ்சு கேப்பையும் வென்று கடினமாக முயற்சி செய்துள்ளார். ஆனாலும் அவரது அணி மீண்டும் ஒரு முறை தோற்றுவிட்டது.

விராட் கோலி ஐபிஎல் கோப்பையை பெற தகுதி உடையவர். இதனால் அந்த மாதிரி தகுதி உள்ள அணிக்காக அவர் ஆட வேண்டும். அந்த வகையில் அவர் இணையக்கூடிய சிறந்த அணியாக டெல்லி இருக்கும் என நான் நினைக்கிறேன். டெல்லியில் அவரது குடும்பம் இருப்பதால் ஏன் கோலி டெல்லிக்காக ஆடக்கூடாது?” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்