- Advertisement -
Homeகிரிக்கெட்தோனியின் பந்து வீச்சில் அவுட் ஆன முதல் ஆள் நானா? வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட கெவின்...

தோனியின் பந்து வீச்சில் அவுட் ஆன முதல் ஆள் நானா? வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட கெவின் பீட்டர்சன்

-Advertisement-

நடப்பு 16-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளர் பணியை செய்து வரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சனிடம் : “நீங்கள் தான் தோனி கைப்பற்றிய முதல் மற்றும் ஒரே டெஸ்ட் விக்கெட்டா?” என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு இதுகுறித்த விவாதமும் பலரது மத்தியிலும் நடைபெற்று வருகிறது.

ஏனெனில் இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது வர்ணனை செய்து கொண்டிருந்த கெவின் பீட்டர்சன் தோனியை கலாய்க்கும் விதமாக ஏதோ ஒன்றை கூற அதற்கு பதிலளித்த தோனி : என்னுடைய முதல் டெஸ்ட் விக்கெட் நீங்கள்தான் என கெவின் பீட்டர்சனிடம் வேடிக்கையாக பதில் கொடுத்திருந்தார்.

அப்போது நடைபெற்ற அந்த நிகழ்விற்கு பின்னர் தற்போது ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றளவும் நீங்கள்தான் தோனியின் முதல் டெஸ்ட் விக்கெட்டா என்று ரசிகர்கள் பீட்டர்சனிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் வீடியோ ஒன்றினை பீட்டர்சன் பகிர்ந்துள்ளார்.

அதில் : தோனி அன்று சிறப்பாக தான் பந்து வீசினார். ஆனால் நான் அவரின் பந்துவீச்சில் ஆட்டமிழக்கவில்லை. பந்து பேட்டை உரசி சென்றது போல இருந்தது. தோனியும் அவுட் என்று அம்பயரிடம் முறையிட்டார். அம்பயரும் அவுட் என்று தனது முடிவினை கொடுத்தார். ஆனால் டி.ஆர்.எஸ் முறையில் நான் அவுட் இல்லை என்று உறுதியானது.

-Advertisement-

ஆதாரம் மிகத் தெளிவாக உள்ளது. நான் தோனியின் முதல் டெஸ்ட் விக்கெட் அல்ல இருந்தாலும் நீங்கள் சிறப்பாகவே பந்து வீசினீர்கள் என தோனியின் அந்த வீடியோவின் மூலம் பீட்டர்சன் தோனியின் முதல் டெஸ்ட் விக்கெட் நான் கிடையாது என பதில் கொடுத்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்