- Advertisement -
Homeவிளையாட்டுசிஎஸ்கே கதையை முடிச்சாச்சு.. என்னோட அடுத்த டார்கெட் இதான்.. மனம் திறந்த கலீல் அகமது..

சிஎஸ்கே கதையை முடிச்சாச்சு.. என்னோட அடுத்த டார்கெட் இதான்.. மனம் திறந்த கலீல் அகமது..

- Advertisement-

சேப்பாகத்தில் நடந்த முதல் இரண்டு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரமான வெற்றி பெற்றிருந்த நிலையில் மூன்றாவது போட்டியில் அவர்கள் டெல்லி அணிக்கு எதிராக தோல்வி அடைய முக்கிய காரணமாக இருந்தவர் தான் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது. இவர் புது பந்தில் மிக அழகாக பந்தை ஸ்விங் செய்து வீசினார்.

192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி ஆடிய சமயத்தில் எப்படியாவது நிச்சயம் அவர்கள் வென்று விடுவார்கள் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சிஎஸ்கேவுக்காக சிறப்பான பேட்டிங்கை முந்தைய போட்டிகளில் ஆரம்பித்து வைத்த ரச்சின் ரவீந்திரா இந்த போட்டியில் ரன் சேர்க்கவே சிரமப்பட்டார். முதல் ஓவரில் ருத்துராஜ் ஒரு ரன் எடுத்து அவுட்டாக, மூன்றாவது ஓவரில் ரச்சின் 12 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக ஆட்டம் இழந்திருந்தார்.

முதல் மூன்று ஓவர்களில் ரன் சேர்ப்பதற்குள் இந்த இரண்டு விக்கெட்டுகளையும் சிஎஸ்கே இழந்ததால் அதன் பின்னர் அவர்களால் நிமிர்ந்து நின்று ரன் சேர்க்கவே முடியவில்லை. மிட்செல் மற்றும் ரஹானே ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தாலும் அது சிஎஸ்கே அணிக்கு சாதகமாக அமையாமல் போக பின்னர் வந்து ஜடேஜா மற்றும் ஷிவம் துபே கடுமையாக பேட்டிங்கில் சொதப்பி இருந்தனர்.

இறுதிக்கட்டத்தில் தோனியின் அதிரடி சிஎஸ்கே அணிக்கான வெற்றியாக மாறாமல் போக 20 ரன்கள் வித்தியாசத்தில் அவர்கள் தோல்வி அடைந்தனர். புதுப்பந்தில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் ஒரு மெய்டன் ஓவருடன் நான்கு ஓவர்கள் பந்து வீசிய கலீல் அகமது, 21 ரன் மட்டுமே கொடுத்திருந்தார்.

- Advertisement-

முதல் இரண்டு விக்கெட்கள் போனதால் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவ நேரிட்டதால் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் கலீல் அஹமது ஆட்ட நாயகன் விருதினை வென்றிருந்தார்.

இதற்கு பின் அவர் பேசுகையில், “முதல் தர போட்டிகளில் மிகவும் கடினமாக கடந்த ஒரு வருடமாக நான் உழைத்திருந்தேன். கடந்த ஆறு மாதங்களில் நான் நிறைய கிரிக்கெட் போட்டிகள் ஆடி இருந்தேன். அது தான் எனது பந்து வீச்சையும் மேம்படுத்த உதவி இருந்தது. பந்து ஸ்விங் ஆகி பேட்ஸ்மேன் விக்கெட் ஆனது மகிழ்ச்சியாக இருந்தது. நான் எப்படி தொடர்ந்து ஃபிட்டாக இருக்க முடியும் என்பதை பற்றியும் சுயமாக ஆராய்ந்து வருகிறேன்.

ரெட் பந்து வீசும் போது அது எப்படி உங்கள் கையில் இருந்து வெளியே வருகிறது என்பதை பற்றி நிறைய விஷயங்களை சொல்லித் தரும். இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பது தான் எனது முக்கியமான இலக்கு” என நம்பிக்கையுடன் கலீல் அகமது தெரிவித்துள்ளார்.

சற்று முன்