- Advertisement -
Homeவிளையாட்டுமும்பை அணியில் ரஷீத் கான் - ஆகாஷ் அம்பானி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு. அப்போ...

மும்பை அணியில் ரஷீத் கான் – ஆகாஷ் அம்பானி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு. அப்போ இந்த டி20 லீக் கலகட்ட போறது உறுதி.

- Advertisement-

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் மிகப்பெரிய வெற்றி, உலகளவில் அதே போல பல தொடர்களை உருவாக்கி வருகிறது. தென் ஆப்பிரிக்கா மற்றும் எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் ஐபிஎல் போலவே லீக் போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கிரிக்கெட் பெரிதாக விளையாடப்படாத அமெரிக்காவில் இப்போது மேஜர் கிரிக்கெட் லீக் என்ற தொடர் முதல் முறையாக இந்த ஆண்டு முதல் ஆரம்பமாகவுள்ளது. இதில் மொத்தம் ஆறு அணிகள் மோதுகின்றன.

ஜூலை 13 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள இந்த போட்டியானது மூன்று வாரங்கள் டல்லாஸில் நடைபெற உள்ளது. அதே போல உலகின் மிக முக்கிய கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஜஹில் பங்கேற்க உள்ளனர். இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி MI நியூயார்க் அணியையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் இப்போது நியூயார்க் அணியின் ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸின் சகோதர அணியான எம்ஐ நியூயார்க், போட்டிக்கு முன்னதாக தங்களது நட்சத்திரங்கள் நிறைந்த அணியை அறிவித்தது. நிக்கோலஸ் பூரன், டிம் டேவிட், டெவால்ட் ப்ரீவிஸ் , ஜேசன் பெஹ்ரென்டோர்ஃப், ரஷீத் கான்,  ட்ரண்ட் போல்ட், கசிகோ ரபாடா என ஏராளமான நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் MLC தொடக்கப் பதிப்பில் நியுயார்க் அணியை வழிநடத்துகிறார்.

சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டு மும்பை இந்தியன்ஸ் பயிற்சிக் குழுவில் பொல்லார்ட் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இவர் MI எமிரேட்ஸ் அணிக்கும் கேப்டனாக இருந்துள்ளார்.

- Advertisement-

இந்த அணியின் தலைமை கோச்சாக ராபின் பீட்டர்சன் இருப்பார் என்றும், பௌலிங் கோச்சாக மலிங்கா இருப்பார் என்றும், ஜே.அருண்குமார் மற்றும் ஜேம்ஸ் பாம்மென்ட் முறையே பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: ஒரே பந்துக்கு ரெண்டாவது தடவ டிஆர்எஸ் எடுத்தது ஏன்? போட்டிக்குப் பின்னர் அஸ்வின் கொடுத்த விளக்கம்

இந்த அணி குறித்து பேசியுள்ள இந்தியன்ஸ் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி, இந்த அணியானது அனுபவம் மற்றும் இளைஞர்கள் என இரண்டும் கொண்ட ஒரு அணியாக உள்ளது. வெளிநாட்டு வீரர்களோடு சிறந்த அமெரிக்க வீரர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். MI நியூயார்க் அணி நிச்சயம் சவால் நிறைந்த ஒரு அணியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

சற்று முன்