- Advertisement 3-
Homeவிளையாட்டுநாங்க ரிட்டயர்டு ஆனா அது எங்க ஞாபகத்துலயே இருக்காது.. எமோஷனல் ஆன கே எல் ராகுல்

நாங்க ரிட்டயர்டு ஆனா அது எங்க ஞாபகத்துலயே இருக்காது.. எமோஷனல் ஆன கே எல் ராகுல்

- Advertisement 1-

மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் நம்பர் 1 அணியாக இந்தியா இருந்த போதிலும் அவர்கள் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்து தான் வருகிறது. இந்தியா மற்றும் ஆசிய மண்ணில் சிறப்பாக ஆடும் இந்திய அணி, வெளிநாட்டு தொடர்களில் ஏனோ சொதப்பி விடுகிறது.

தென் ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணிக்கு இந்த முறை நல்ல வாய்ப்பு அமைந்திருந்தது. ஆனால் அதையும் முதல் போட்டியில் தோல்வியடைந்து தவற விட்டுள்ளது இந்திய அணி. இதனால் அவர்களின் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டின் மீதும் அதிகமான விமர்சனங்களையும் பல கிரிக்கெட் பிரபலங்கள் வைத்து வருகின்றனர்.

இதற்கு முன்பாக கூட உலக கோப்பை தொடரிலும் ஜொலித்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் மட்டும் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றத்தை அளித்திருந்தது. மிகச் சிறந்த அணியாக இந்திய அணி இருந்த போதிலும் தொடர்ந்து ஐசிசி கோப்பைகளை வெல்லும் வாய்ப்பை அடுத்தடுத்து இந்திய அணி தவறவிட்டு தான் வருகிறது. அற்புதமான அணியாக இருந்த போதிலும் எதனால் ஐசிசி கோப்பையை வெல்ல முடிவதில்லை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய அணியின் முன்னணி வீரரான கே எல் ராகுல் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வரை பேட்டிங்கில் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்து வந்த கே எல் ராகுல், ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை தொடர்களில் மிக அற்புதமாக ஆடி இருந்தார்.

- Advertisement 2-

இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராகவும் இருக்கும் கே எல் ராகுல், சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில், “10 அல்லது 15 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் ஓய்வு பெறும் சமயத்தில் எங்கள் நினைவில் நிற்க போவது நாங்கள் அடித்த ரன்களோ அல்லது வீழ்த்திய விக்கெட்டுகளோ இல்லை இரு தரப்பு தொடரின் வெற்றிகளோ கிடையாது.

எங்கள் நினைவில் வந்து முதலில் நிற்க போவதெல்லாம் உலக கோப்பை வெற்றி மட்டும் தான். அதனால் அணியில் உள்ள வீரர்கள் அனைவருக்கும் உலக கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. இந்த முறை நூலிழையில் தவற விட்ட கோப்பையை அடுத்த உலக கோப்பையில் நிச்சயம் இதை விட சிறப்பாக செயல்பட்டு அதை வெல்வதற்காக முயற்சி செய்வோம்” என நம்பிக்கையுடன் கே எல் ராகுல் கூறி உள்ளார்.

சற்று முன்