- Advertisement -
Homeவிளையாட்டுதோல்விக்கு காரணமே அதான்.. அடுத்த தடவ மிஸ் ஆகாது.. உறுதியாக சொன்ன கே எல் ராகுல்..

தோல்விக்கு காரணமே அதான்.. அடுத்த தடவ மிஸ் ஆகாது.. உறுதியாக சொன்ன கே எல் ராகுல்..

- Advertisement-

முதல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, அதன் பின்னர் தொடர்ச்சியாக பஞ்சாப், பெங்களூரு மற்றும் குஜராத் ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது. நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றியுடன் கம்பீரமாக இந்த தொடரில் திகழ்ந்திருந்த கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, அடுத்ததாக டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளது.

இந்த இரண்டு போட்டிகளிலும் லக்னோ அணியின் பேட்டிங் தான் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்திருந்த நிலையில் இரண்டிலுமே அவர்கள் 170 ரன்களை தொடவே இல்லை. ஒரு சில வீரர்களின் முயற்சியால் தான் இந்த ரன்னையே அவர்கள் தொட்டிருந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிராக 161 மட்டும் தான் எடுத்திருந்தனர்.

இதனால் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியோ இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 16 வது ஓவரிலேயே வெற்றியை பெற்று தங்களின் ரன் ரேட்டையும் அதிகமாக உயர்த்தி உள்ளது. அதிலும் அந்த அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் 47 பந்துகள் மட்டுமே சந்தித்து 89 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். அவரே ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்த நிலையில் மூன்று வெற்றிகளால் உற்சாகத்தில் இருந்த லக்னோ அணி, இரண்டு தொடர்ச்சியான தோல்விகளால் சிறிய ஆட்டம் கண்டுள்ளது என்றே சொல்லலாம்.

தோல்விகளுக்கு பின் பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல், “இது மிகவும் ஒரு மோசமான தோல்வி. இது போன்ற போட்டிகளை ஜீரணிக்கவே மிக கடினமாக உள்ளது. ஐபிஎல் தொடரில் பல அணிகளும் இது போன்ற ஒரு கட்டத்தை கடந்து வருவார்கள். எங்கே தவறு நடந்தது என்பதை ஆராய்ந்து அதில் சிறப்பாக கவனம் செலுத்தி நிச்சயம் சிறப்பாக திரும்பி வருவோம். பேட்டிங்கில் நாங்கள் அடித்த சில ஷாட்கள், சிறப்பாக கைகொடுக்காததால் விக்கெட்டுகளை இழந்தும் தடுமாறினோம்.

- Advertisement-

அங்கு தான் போட்டியையும் நாங்கள் தவற விட்டோம். சமர் ஜோசப் சிறப்பாக பந்து வீசுவதுடன் வேகமாக வீச வேண்டும் என்றும் நினைக்கிறார். முதல் ஐபிஎல் போட்டியில் ஆடும் போது இது போன்று ரன்களை வழங்குவது சாதாரணமான விஷயம் தான். அவர் லைன் மற்றும் லெந்த்தில் தொடர்ச்சியாக உழைத்து பவர் பிளேவில் பந்தை நன்றாக ஸ்விங் செய்ய வேண்டும்.

அடுத்தடுத்து தோல்விகளால் நாங்கள் பயந்து போக மாட்டோம். கடந்த இரண்டு போட்டிகளில், நாங்கள் 160 ரன்களுக்கு மேல் பெரிதாக ரன் குவிக்க முடியாமல் போனது. அதில் தான் இனிமேல் கவனம் செலுத்தி சரி செய்ய வேண்டி உள்ளது” என கே எல் ராகுல் கூறியுள்ளார்.

சற்று முன்